பிரச்சினையில்லாமல் சுமூகமாக விஸ்வரூபம் 2 ஐ வெளியிட விரும்பும் கமல்!
சென்னை: எந்த சர்ச்சையும் சிக்கலும் இல்லாமல் தனது விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட விருபுவதாக கமல் தெரிவித்துள்ளார்.
கமலின் 'விஸ்வரூபம்' படம் ரிலீசான போது இஸ்லாமிய அமைப்புகள் பிரச்சினை, திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சினை என கடுமையாக பிரச்சினைகளில் சிக்கியது. தமிழக அரசு அந்தப் படத்தை தடையே செய்தது.
சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, தமிழக அரசின் தடை விலகிய பிறகே படம் வெளியானது.

விஸ்வரூபம் 2
தற்போது இதன் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம்- 2' படத்தை கமல் நடித்து இயுக்கியுள்ளார். இந்த படத்துக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை தங்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும் என கோரியுள்ளன.

சிக்கல் வராது
‘விஸ்வரூபம்‘ படத்தை போல் ‘விஸ்வரூபம் - 2' படத்துக்கும் எதிர்ப்புகள் வருமா? என கமலஹாசனிடம் கேட்ட போது, 'வராது' என்று பதில் அளித்தார். ‘விஸ்வரூபம்-2' படத்தில் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏன் எனக்கு மட்டும்?
சண்டியர், ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ் என என் படங்கள் மட்டும் தொடர்ந்து எதிர்ப்புக்கு உள்ளாவது ஏன் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

உத்தம வில்லன் முதலில்..
நான் நடித்துக் கொண்டிருக்கும் ‘உத்தமவில்லன்' படம் முதலில் வெளியாகும். அதன் பிறகுதான் ‘விஸ்வரூபம்-2' படம் வரும் என்றும் அவர் கூறினார்.

பாபநாசம் படக்குழு தயார்
இந்த நிலையில் கமல் ஹாஸன் அடுத்து நடிக்கும் பாபநாசம் படத்துக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு, நடிகர் நடிகைகள் என அனைவருமே தயாராகிவிட்டார்கள். செம்டம்பர் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.


Click it and Unblock the Notifications











