Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'கமல் ரசிகர்களுக்கு தெரிஞ்சா செருப்பால அடிப்பாங்க'... எனக்குள் ஒருவன் மேடையில் சித்தார்த்!
கடவுள் சினிமாவின் கடவுள் மாதிரி, அவர் நடிப்புடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றார் நடிகர் சித்தார்த்.
கன்னடத்தில் லூசியா என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படத்தை தமிழில் 'எனக்குள் ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.
1984-ல் கவிதாலயா தயாரிப்பில் வெளியானது கமல் நடித்த எனக்குள் ஒருவன். கவிதாலயாவிடம் உரிய உரிமை வாங்கி இந்தப் படத்திற்கு அந்த பெயரை வைத்திருக்கிறார் சி.வி.குமார்.
நடிகர் சித்தார்த் இந்தப் படத்தில் எடுப்பான பல், அழுக்கான சட்டை, கோமாளித் தனமான நடிப்பு என ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். தன் ரொமான்டிக் இமேஜை (??) உடைக்கவே இந்த கெட்டப் மாற்றமாம்.
சித்தார்த்தின் கடின முயற்சியைப் பாராட்டும் விதத்தில் 'சித்தார்த் கமலைப் போலவே நடித்திருக்கிறார்' என்று சொல்லிவிட்டார், இந்தப் படத்தில் நடிக்கும் அஜய் ரத்னம்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த், 'கமல் சார் திரையுலகத்தோட கடவுள் மாதிரி. அவர் நடிச்சதுல 10 சதவீதம் கூட நான் நடிக்கல. அஜய் ரத்னம் சார்கிட்ட அப்பறமா ‘இந்த விஷயம் கமல் சாருக்கு தெரியாமல் பார்த்துக்க சொல்லனும்னு நினைச்சேன்.
ஆனா இப்ப சொல்றேன் இந்த விஷயம் கமல் சாருக்கு இல்ல, அவரோட ரசிகர்களுக்கு தெரிஞ்சா கூட போதும் செருப்பால அடிப்பாங்க," என்றார் ஏக அடக்கத்துடன்.
அதென்னமோ சரிதான்!