மாடம்பாக்கம் ஏரியை தூர் வாரி தன் பிறந்த நாளைத் தொடங்கிய கமல் ஹாஸன்!
சென்னை: சென்னை புறநகரில் உள்ள மாடம்பாக்கம் ஏரியை தனது ரசிகர்கள் மற்றும் தூய்மை இந்தியா அமைப்புடன் சேர்ந்து தூர் வாரி தனது பிறந்த நாளைத் தொடங்கினார் கமல் ஹாஸன்.
பிரதமர் நரேந்திர மோடி தனது தூய்மை இந்தியா திட்டத்தை ஆரம்பித்த போது அழைப்பு விடுத்த 9 பேரில் நடிகர் கமல் ஹாஸனும் ஒருவர். இதற்கு நன்றி தெரிவித்த கமல், 9 மில்லியன் பேருக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன் தனது பிறந்த நாளன்று மாடம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்து, தூய்மை இந்தியா பணியைத் தொடங்குவதாக அறிவித்தார்.
அதன்படி இன்று காலை வேளச்சேரியை அடுத்த மாடம்பாக்கம் ஏரிக்கு வந்த கமல் ஹாஸன், தனது நற்பணி இயக்கத்தினருடன் இணைந்து குப்பை அள்ளும் பணியைத் தொடங்கி வைத்தார்.

அவரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications












