ஹீரோ .. ஹீரோ ..

By Staff

மின்னலே, காக்க.. காக்க.. என இரண்டே இரண்டு படங்களால் சினிமாவையே தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் கெளதம்

காக்க.. காக்க.. படத்தின் திரைக்கதையமைப்புக்கு ஏராளமான பாராட்டுகள். இதே படத்தை கெளதமை வைத்து ஆங்கிலத்தில்எடுக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஈடுபட்டிருக்கிறார். இந் நிலையில் கெளதம் சத்தமில்லாமல் மீண்டும்சூர்யாவையே வைத்து, சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகி யாரென்று முடிவு செய்யாமலேயே பாடல் பதிவையும், படப்பிடிப்பையும் தொடங்கியவர்கள் இப்போது ஆஷினைஹீரோயினாக்கி இருக்கிறார்கள். படத்தில் சூர்யாவை முதல் முறையாக ஒரு பாடலையும் பாட வைத்திருக்கிறார் கெளதம்.

சென்னையில் ஒரு மழைக்காலத்தில் மூழ்கியிருக்கும் கெளதமுக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சி. அவரின் அடுத்த படத்தில் நடிக்ககமல் சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத் தயாரிக்கப் போவது ரோஜா கம்பைன்ஸ் காஜாமைதீன்.

நல்ல கதை மட்டுமே வைத்து படங்களை எடுக்கும் எல்லா இயக்குநர்களுக்கும், கமலுடன் ஒரு படம் செய்ய வேண்டும் என்பதுஒரு கனவாக இருக்கும். எவ்வளவை கனமான பாத்திரத்தையும் இவர் மீது சுமத்தலாம் என்ற நம்பிக்கைதான் காரணம்.

இளம் தலைமுறை இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களாக இருக்கும் பாலாவும், கெளதமும் தங்களது அடுத்த படங்களில்கமலை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். இதில் இருவருக்குமே வெற்றி.

அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை முடித்துவிட்டு கமலுடன் பாலா இணைவார் என்கிறார்கள். இந்தக் கூட்டணியில்இளையராஜாவும் நிச்சயம் உண்டாம்.

சென்னையில் ஒரு மழைக்காலத்தை முடித்துவிட்டு கமலை வைத்து படத்தை ஆரம்பிக் போகிறாராம் கெளதம். அதற்குள்குறுகிய காலத் தயாரிப்பாக கிருஷ்ணலீலாவை கமல் முடித்து ரிலீஸ் செய்துவிடுவார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X