ஹீரோ .. ஹீரோ ..

By Staff

திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை. நீ நடிக்க வேண்டாம் என்று மக்கள் கூறினால்அடுத்த நிமிடமே ஓய்வு பெற்று விடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

ஏழை மாணவ, மாணவியருக்கு ரூ. 75,000 மதிப்புள்ள இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியைகமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்றம் சென்னையில் நடத்தியது. கமல் ஹாசன் கலந்து கொண்டு இவற்றைவழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் இப்போது இருக்கும் இடத்திற்கு வந்தது ரசிகர்கள்,மக்களின் அன்பினால். அதை அடைய நான் பட்ட கஷ்டம் மிகப் பெரியது. எனவே இப்போதைக்கு நான்சினிமாவிலிருந்து ஓய்வு பெற மாட்டேன்.

என்னை வளர்த்து விட்ட மக்கள், நீ வேண்டாம் என்று கூறும்போது நான் போய் விடுவேன். அதுவரை 60 வயதுதாத்தாவாக, அதற்கும் மூத்த தாத்தாவாக நடித்துக் கொண்டிருப்பேன்.

நடித்துக் கொண்டிருக்கும்போதே செத்து விடவேண்டும் என்றெல்லாம் நான் விரும்பவில்லை. அப்படி நடந்தால்,படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் கதி என்ன ஆவது?

எனது புதிய படம் மிக அருமையாக வந்துள்ளது. வருகிற டிசம்பர் 4 அல்லது 5 ஆகிய நாட்களில் ஒன்றில் படத்தின்பாடல் கேசட் வெளியிடப்படவுள்ளது. அப்போது படத்தின் பெயரையும் அறிவிக்கவுள்ளேன்.

இந்தப் படத்தின் மூலம் சில நல்ல நடிகர்களை நான் அறிகப்படுத்தியுள்ளேன். என்னை விட மிக அருமையாகஅவர்கள் நடித்திருக்கிறார்கள். இதை நான் திமிரோடு சொல்வேன். நான் வெறும் ஊக்கியாகத்தான் இதில்இருக்கிறேன். என்னை தூக்கி சாப்பிடக் கூடிய அளவுக்கு அவர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்போது நமது மக்களுக்குத் தேவையானது கல்வி தான். எனவே இளம் நடிகர்கள் மற்றும் கலைத் துறையினர்தங்களது பிறந்த நாளை இதுபோல, புத்தகங்கள் வழங்குவது, சீருடை வழங்குவதை வழக்கமாக்கிக் கொண்டால்மகிழ்ச்சி அடைவேன்.

எனக்கு அரசியல் தெரியாது. எனவே சத்தியமாக அரசியலுக்கு வர மாட்டேன். நான் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாவது வதந்திகள் அல்ல, பொய்யான செய்திகள். கண்டிப்பாக நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X