மீண்டும் மருதநாயகம்... பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து எடுக்கிறார் கமல்?

By Shankar

கமலின் லட்சியப் படமான மருதநாயகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இதனை கமல் ஹாஸனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கமல் ஹாஸன் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் மருதநாயகம். அன்றைக்கு இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 50 கோடி.

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

1997-ல் இந்தப் படத்துக்கு பூஜை சென்னையில் நடந்தது. பிரிட்டிஷ் ராணி எலிசபெத், முதல்வராக இருந்த கருணாநிதி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டனர். உடனடியாக படப்பிடிப்பு துவக்கப்பட்டது.

நிறுத்தம்

நிறுத்தம்

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீர் பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து படப் பிடிப்பை நடத்த முடியவில்லை. படம் நின்று போனது. மருதநாயகம் படப்பிடிப்பை மீண்டும் துவக்க கமல் பலமுறை முயன்றும் நடக்கவில்லை.

ட்ரைலருக்கே கோடிகளில்...

ட்ரைலருக்கே கோடிகளில்...

இந்தப் படத்துக்கான ட்ரைலரை உருவாக்கவே கோடிகளில் செலவழித்தார் கமல் என்று முன்பு கூறப்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல... மருதநாயகம் பெருங்கனவாகவே போய்விட்டது. ஆனால் அந்த ட்ரைலர் பார்த்தவர்களை மிரள வைக்கும்படி வந்திருந்தது.

மும்மடங்கானது பட்ஜெட்

மும்மடங்கானது பட்ஜெட்

அதிக முதலீடு செய்ய தயாரிப்பாளர் கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பை துவக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ரூ 150 கோடி வரை இந்தப் படத்துக்கு இப்போது முதலீடு தேவை.

பாக்ஸ் ஸ்டார்

பாக்ஸ் ஸ்டார்

தற்போது ஹாலிவுட் பட நிறுவனமான ‘பாக்ஸ்' ஸ்டார் ஸ்டூடியோ' மருதநாயகம் படத்தை எடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிச்சயம் எடுப்பேன்

நிச்சயம் எடுப்பேன்

இதுகுறித்து கமல் கூறும்போது, ‘‘மருதநாயகம் பெரிய பட்ஜெட் படம், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு உள்ளூரில் தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். ஆனாலும் விரைவில் இந்த படத்தை எடுப்பேன்'' என்றார்.

இளையராஜா

இளையராஜா

மருதநாயகம் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ட்ரைலருக்கும் அவர் இசையமைத்தார். பாடல் ஒன்றும் பதிவாக்கப்பட்டது. ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன் என அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

மேலும் படங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X