ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ஜாதி, மத சாயம் இல்லாத அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு தர நான் தயார் என்று கூறியுள்ள நடிகர் கமலஹாசன், தற்போதுஅப்படிப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கமல் நற்பணி மன்றம் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு தொழிலாளர்களுக்கு கமல் ஏராளமான உதவிகளைவழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் தேவையில்லை என்பதே எனது கருத்து. ரசிகர் மன்றங்கள் என்பது டைம் வேஸ்ட். மனித நேரங்களைவீணடிக்கும் செயல் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் தீவிர ரசிகன் நான். அதற்காக நான் அவர்களுக்கு நான் ரசிகர்மன்றங்கள் எதுவும் தொடங்கவில்லை.

நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி வருகிறார். அவர் ஒரு அரசியல்தலைவர். தன்னுடைய கருத்தை அவர் இன்னும் அழுத்தமாகக் கூறலாம்.

ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எனது ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டேன். மக்களுக்கு உதவும் சேவைகளை மட்டுமேஎனது ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.

சினிமாப் படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடித்தால் ரசிகர்கள் நிச்சயம் கெட்டுப் போவார்கள். புற்று நோய்க்கு 70 சதவீத காரணம்சிகரெட்தான். இது பிரச்சாரம் அல்ல. புற்று நோய்க்கு என்னுடைய 2 நண்பர்களை நான் பறிகொடுத்துள்ளேன்.

எனக்கும் அரசியலுக்கும் காத தூரம் உள்ளது. அரசியலுக்கு வர வேண்டும் என்றால், அரசியலுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றால் முதலில் அங்கு சத்தியம் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று ஜாதி, மதங்களை ஆதரிக்கும் போக்குதான் அதிகம் காணப்படுகிறது. அவை எதுவும் இல்லாமல் சத்தியம்மட்டுமே பேசும் நல்ல அரசியல்வாதிகள் இருந்தால் அவர்களுக்காக ஓட்டு கேட்கலாம்.

முடிந்தால் மக்களிடம் சென்று "இவர் நல்லவர். இவருக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று கேட்கவும் நான் தயார்தான். ஆனால்அப்படிப்பட்ட நிலை இங்கு இருப்பதாக நான் கருதவில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.

நாட்டில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. எனவே கிடைக்கும் வேலையை திறமையுடன் செய்து கொள்ளும்பக்குவம் இளைஞர்களுக்கு வர வேண்டும். அதை எங்களது நிற்பணி மன்றம் மூலம் நாங்கள் அடிக்கடி நிரூபித்து வருகிறோம்.

நாட்டில் இன்று நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் அரசியல்வாதிகள் செய்யும் லஞ்ச ஊழல்கள்தான் என்றார் கமல்.

பேட்டியின்போது சில நிருபர்கள் சிம்ரனுடனான காதல் குறித்து கேள்விகள் கேட்டனர். அதற்கு கமல் பதிலே சொல்லாமல்முகத்தை கடுப்பாக்கிக் கொண்டு "கம்"மென்று இருந்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X