»   »  கமலின் அடுத்த படத் தலைப்பு 'உத்தம வில்லன்?'

கமலின் அடுத்த படத் தலைப்பு 'உத்தம வில்லன்?'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு உத்தம வில்லன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம் 2 படத்துக்கு பின் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை இயக்கி நடிக்கிறார் கமல்ஹாஸன்.

Kamal
இந்தப் படம் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாக ஆரம்பித்துள்ளது. இந்தப் படத்தை ரூ 45 கோடி பட்ஜெட்டுக்குள் எடுத்துவிடும் திட்டத்தில் உள்ளனர். அவ்வை சண்முகி மாதிரி முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக இதனை எடுக்கிறார்களாம்.

படத்துக்கான பணிகள் துவங்கியுள்ளன. கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.

முதல் முறையாக கமலுடன் கைகோர்க்கிறார் நடிகர் விவேக். படத்தின் தலைப்பு குறித்து பல தககவல்கள் வெளியாகியுள்ளன. நகைச்சுவைப் படம் என்பதால் உத்தம வில்லன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்தியை கமல் தரப்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கெனவே சர்வாதிகாரி, தலைவன் இருக்கிறான் உள்பட பல தலைப்புகளை கமல் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

English summary
Kollywood reorts suggest that Kamal has finalised Uthama Villain as the title of his new movie.
Please Wait while comments are loading...