twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர்கள் எதிர்ப்பு குறித்து கவலையில்லை.. ஜனவரி 10ம் தேதி விஸ்வரூபம் டிடிஎச்சில் ரிலீஸ் - கமல் அற

    By Shankar
    |

    Kamal
    சென்னை: தியேட்டர்கள் எதிர்ப்பு குறித்து கவலையில்லை. திட்டமிட்டபடி ஜனவரி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு டிடிஎச்சில் விஸ்வரூபம் வெளியாகும் என கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    ரூ 95 கோடி செலவில் கமல் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 11-ம் தேதி வருகிறது.

    இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் அறிவித்திருந்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் இந்த விஷயத்தில் ஒரே அணியாக உள்ளனர்.

    இந்நிலையில், விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் வெளியிட்டார்.

    இன்று சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற 'விஸ்வரூபம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற கமல், "யார் எதிர்ப்பு குறித்தும் கவலையில்லை. எதிர்ப்பவர்கள் பின்னர் என் நிலையைப் புரிந்துகொள்வார்கள்.

    5 டிடிஎச் நிறுவனங்கள்...

    திட்டமிட்டபடி விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்,"என்றார்.

    English summary
    Kamal Hassan has officially announced the DTH release of Viswaroopam today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X