கேன்ஸ் பட விழாவில் கமல் ஹாஸன்!
சென்னை: பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.
பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் உலகத் திரைப்பட விழா நடக்கிறது. சர்வதேச அளவில் மிக முக்கியமான திரைப்பட விழா இது.
உலக அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து திரைக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இதை ஒரு பெருமையாக அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த விழாவுக்கு ஆண்டுதோறும் பாலிவுட்டிலிருந்து முக்கிய நடிகர் நடிகைகள் அழைக்கப்பட்டு, அங்கு நடக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் மரியாதை செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்த டிட்லி என்ற இந்திப் படம் மட்டும் விழாவில் கலந்து கொள்கிறது. கவுரவப் பிரிவில் இந்தப் படத்துக்கு இடம் கிடைத்துள்ளது. போட்டிப் பிரிவுக்கோ, போட்டியில்லாத பிரிவுக்கோ எந்த இந்தியப் படமும் போகவில்லை.
நாளை தொடங்கி, வரும் மே 25 வரை நடக்கும் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து நடிகர் கமல்ஹாஸன் சென்று கலந்து கொள்கிறார். அவருடன் பிலிம்சேம்பர் நிர்வாகிகளும் செல்கின்றனர்.


Click it and Unblock the Notifications











