For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹீரோ .. ஹீரோ ..

  By Staff
  |

  - கமல் சிறப்புப் பேட்டி

  தீபாவளிக்கு தெனாலிபடம் வருவதற்கு முன்பே, தன்னுடைய நண்பர்களையும்,ரசிகர்களையும் அழைத்து ஒரு தீபாவளிக் கொண்டாட்டம் போல, தன்னுடையஆளவந்தான் படத்தின் ஆரம்ப விழாவை நேரு ஸ்டேடியத்தில் நடத்துவதற்கான பூர்வாங்கவேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட, நமக்காக சில நிமிடங்களை ஒதுக்கினார்கமல்ஹாசன்.

  இனி பேட்டி ...

  உங்கள் ஆளவந்தான் படம் ஒரு தமிழ் வார இதழில் தாயம் என்கிற பெயரில் நீங்கள்எழுதி வெளிவந்த கதைதான் என்கிறார்களே?

  இருபது வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய தாயம் என்கிற கதையின் தழுவல் தான்ஆளவந்தான் என்பது உண்மை. ஆனால் அதிலிருந்து நிறைய மாற்றங்களைதிரைக்கதையில் செருகியிருக்கிறேன்.

  இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சில மாறுதல்களைசெய்துள்ளேன். அந்தக் கதையைநினைத்துக்கொண்டு வந்தால் ஏமாந்து போவார்கள்.

  உண்மையைச் சொல்வதென்றால் என்னுடைய குருநாதருக்காக நான் எழுதினேன்.அவர்தான் இந்தக் கதையை இயக்க வேண்டும் என்றும் அப்பொழுது நினைத்தேன்.ஆனால் அவருக்கு ஆக்ஷன் படங்களை இயக்குவதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.

  குருவுக்காக நான் எழுதிய கதையை, அவருடைய சிஷ்யன் சுரேஷ் கிருஷ்ணாஇயக்குகிறார் என்பதில் இந்த சிஷ்யனுக்கு மகிழ்ச்சிதான்.

  இன்று பத்திரிகைகளில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் , டாப்பிக்கல் நியூஸானசந்தனக் கடத்தல் வீரப்பன், ராஜ்குமாரை கடத்திக்கொண்டு வைத்திருப்பது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

  நான் சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பற்றி பேசினால், பூலான் தேவியைப் பற்றியும்பேசவண்டும். அதனையும் தொடர்ந்து வேறு சிலரைப் பற்றியும் பேச வேண்டும். நமதுசொஸைட்டிக்குள் கிரிமினல்கள் நுழைந்து விட்டார்கள். அதுவும் சட்டபூர்வமாகவும்,அதிகாரபூர்வமாகவும்.

  இந்த விஷயத்தில் புண்ணியம் கட்டிக்கொண்டவர் ஜெயபிரகாஷ் நாராயணன். அவர்களும்நமது சகோதரர்கள் தான் என்று நமக்கு நாமே சாமதானம் பண்ணிக் கொள்ளலாம்.

  ஒருவர் டாக்டராக இருப்பார், இன்னொருவர் வக்கீலாக இருப்பார். ஒருவர் சிகரெட்பிடிப்பார், இன்னொருவர் கிடைத்ததையெல்லாம் பிடிப்பார். இன்னொருவன் எதுவுமேஇல்லாமல் என்னைப்போல நாடகக்காரனாகி விடுவான். இதெல்லாம் சொஸைட்டியிலநடக்கிற விஷயம் தான் என்று உவமானங்களை அடுக்கியபடியே நம்மை சமாதானம்செய்தும் கொள்ளலாம்.

  இது நியாயமா? தர்மமா? என்று என்னால் செல்லமுடியவில்லை. நாமதான் நமதுசொஸைட்டியோட நியாயத்தை ஒரு நூற்றாண்டுக்கு நான்கு முறைமாற்றிக்கொள்கிறோமே. ஒரு நிலையான மாற்றம் என்று ஒன்றை என்றுகடைபிடிக்கிறோமோ அன்றுதான் நமக்கு நல்ல காலம் பிறக்கும்.

  ஒரு காலகட்டத்தில் விதவைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பொழுதுதேவடியாள் என்று செல்லி அவளை தீயை வைத்து கொளுத்தியதும், மணமான பெண்கணவன் இல்லாமல் வெளியே சென்றால் கல்லால் அடித்து கொன்றதும் இந்த நாட்டில்தானே நடந்திருக்கிறது.

  இப்பொழுது விதவைப் பெண் என்று பார்ப்பதில்லை. கணவன் செத்துப் போய் விட்டான்,அவ்வளவுதான் என்று பார்க்கின்ற நிலை இப்பொழுது உருவாகியிருக்கிறது.

  இப்பொழுது நமக்கு நியாயமாகப்படும் விஷயங்கள் நூறு வருடத்திற்கு பிறகுதவறாகப்படலாம்.

  ஹேராம் படத்தின் தோல்வி உங்களை பாதித்திருக்கிறதா?

  அந்தப் படம் தோல்விப் படம் தான். என்றாலும் அதன் பாதிப்பை கொஞ்சம்கடுமையாகவே உணர்ந்தேன். தெனாலி, ஆளவந்தான் படங்களில் நடிக்கக் கிடைத்தவாய்ப்புக்கள் எனக்கு ஆறுதலாக உள்ளது. இதோடு, என்னுடைய ஹேராம் படத்தில் நடித்தஷாருக் கான் உள்பட பலரும் இன்று வரை என்னிடம் பணம் வாங்கிக் கொள்ளவில்லை.நான் பல முறை அவரிடம் வலியுறுத்தியும்கூட, அவர் வாங்க மறுத்துவிட்டார்.

  எனக்கே கூட இப்படியொரு மனப்பக்குவம் வருமா என்று நான் எண்ணிப்பார்த்திருக்கிறேன். உண்மையாகவே, நீங்கள் திருப்பித் தர வேண்டும் என்று நினைத்தால்எனக்காக ஒரு படத்தை டைரக்ட் செய்து தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

  ஹேராமில் என்னுடைய ஹீரோ மஹாத்மா காந்தியை பற்றி எடுத்தேன். ஆனால்ஷாருக்கான் போன்ற உண்மையான நண்பர்களை அடையாளம் தெரிய வைத்த படம் அது.

  மருதநாயகம் படம் எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?

  அரை மணி நேர, மருதநாயகம் படம் தயாராக உள்ளது. இன்னும் ஒண்ணரை மணி நேரம்படம் எடுக்க வேண்டும். அந்தப் படத்தை விரைவில் தொடங்க முயற்சிகள் ஒரு பக்கம்நடந்து கொண்டிருக்கிறது.

  சுமார் ஏழு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 33 கோடி) தேவை. நாளைக்கே ஆறுமில்லியன் டாலர்கள் கிடைத்துவிட்டால் படத்தை ஆரம்பித்து விடுவேன்.

  ஆளவந்தான் படம் பற்றி?

  விஜய் - அப்பு என்கிற இரட்டை வேடத்தில் அண்ணன் தம்பிகளை வைத்துஉருவாக்கப்பட்ட படம். அண்ணன் (மொட்டைத் தலை) அப்பு, தம்பி விஜய்க்கும் நடுவில்உள்ள போராட்டம், சண்டைதான் படம்.

  காதல், மோதல், எல்லாமே உண்டு. தமிழ் இந்தி ஆகிய இரு மொழிகளில் நேரடியாகத்தயாராகும் இந்தப் படத்தில் ரவீணா டான்டன், மனிஷா கொய்ராலாவும் நடிக்கிறார்கள்.

  படத்தின் பாடலை தமிழில் வைரமுத்துவும், இந்தியில் ஜாவேத் அக்தாரும் எழுதுகிறார்கள்.தமிழில் திரைக்கதை வசனம் எழுதுவது நான் தான். இந்தியில் வேறு ஒருவரிடம்கொடுத்திருக்கிறோம்.

  அவ்வளவுதான் இப்பொழுது சொல்ல முடியும் என்று விடைகொடுத்தார் கமல். மறக்காமல்தீபாவளி நல் வாழ்துக்களையும் சொன்னார்.

  நன்றியுடன் விடைபெற்றோம்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X