த்ரிஷ்யம் பட தமிழ் ரீமேக்கில் கமல்ஹாஸன்
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மோகன் லாலின் த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார் கமல்ஹாஸன்.
மோகன் லால் - மீனா ஜோடியாக நடிக்க, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் இதுவரை எந்த மலையாளப் படமும் சாதிக்காத அளவுக்கு வசூலில் சாதனை புரிந்துள்ளது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கில்
இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அங்கு வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

தமிழில்
தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய பெரும் போட்டி நிலவியது. ஆனால் இப்போது மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் பாலாஜி
சுரேஷ் பாலாஜி மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தமிழில் தயாரிக்கின்றனர்.

கமல்ஹாஸன்
மலையாளத்தில் மோகன்லால் நடித்த வேடத்தில் நடிக்கிறார் கமல்ஹாஸன்.இது குறித்து கமலைச் சந்தித்துப் பேசி ஒப்புதலும் வாங்கிவிட்டனர் இயக்குநரும் தயாரிப்பாளர்களும்.

ஜூலையில்...
இதுகுறித்து இயக்குநர் ஜீத்து கூறுகையில், இப்போதுதான் கொச்சியில் கமல் ஹாஸனைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தோம். ஜூலையில் படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்தியிலும் நானே இயக்கவிருக்கிறேன். ஆனால் நடிகர்கள் யாரென்று முடிவு செய்யவில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











