»   »  அண்ணன் சந்திரஹாஸனை பற்றி பேச வேண்டியதே இல்லை, ஏன்னா..: கமல் உருக்கம்

அண்ணன் சந்திரஹாஸனை பற்றி பேச வேண்டியதே இல்லை, ஏன்னா..: கமல் உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரஹாஸனை பற்றி பேச வேண்டியதே இல்லை. அவர் என்னுடைய நிழலாக இருந்து கொண்டே இருப்பார் என உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன் அண்மையில் காலமானார். இந்நிலையில் சென்னை காமராஜர் அரங்கில் அஞ்சலி கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட கமல் பேசியதாவது,

சந்திர ஹாஸன்

சந்திர ஹாஸன்

சந்திர ஹாஸன் மாதிரி இருக்கக் கூடியவர்கள் தான் அறிவுரையை கூட கருத்துக்களை போன்று கூறுவார்கள். மத்தவங்க எல்லாம் கருத்தையே அறிவுரை மாதிரி சொல்வாங்க.

அண்ணன்

அண்ணன்

அண்ணன் என்பது ரத்தத்தினால் கிடைத்த உறவு. அவருடன் ஏற்பட்ட தொடர்பு ஒரு தனிப்பட்ட பாக்கியமாக நான் கருதுகிறேன். எனக்கு அந்த மாதிரி ரொம்ப அதிர்ஷ்டங்கள் உண்டு.

குடும்பம்

குடும்பம்

நான் என்னைப் பத்தி நினைக்கும்போது எனக்கு மட்டும் இப்படி நடக்குதேன்னு கவலைப்பட்டதே கிடையாது. அதற்கு காரணம் எனக்கு இந்த மாதிரி ஒரு குடும்பம், சண்முகம் அண்ணாச்சி, பாலசந்தர் சார் போன்ற குருமார்கள், இப்படிப்பட்ட சகோதரர்கள் உள்ளது. இவர்கள் எல்லாம் இருக்கும்போது, நாங்கள் இருக்கிறோம் என்று இங்கு சொல்லப்பட்டபோது அதை நான் ரொம்ப சீரியஸா எடுத்துக்கிறேன். நீங்கள் எல்லாம் என் கூட இருக்கணும்.

அன்பு

அன்பு

இதே அன்பை என்னால் திருப்பித் தர முடியும் என்பதை கற்றுக் கொடுத்தவர் சந்திரஹாஸன். நான் நிறைய பேசலாம். ஆனால் என் வாழ்க்கையில் என்னை பாதித்தவர்கள் பற்ற தினமும் ஒரு முறையாவது பேசுவேன்.

பாலசந்தர்

பாலசந்தர்

ரவிக்குமாருக்கு தெரியும், அவருடன் படப்பிடிப்பில் இருக்கும் நாட்களில் பாலசந்தர் அவர்களை பற்றி தினமும் ஒரு முறையாவது அவரிடம் பேசிவிடுவேன். நாகேஷை பற்றி பேசுவேன். சந்திரஹாஸனை பற்றி பேச வேண்டியதே இல்லை. அவர் என்னுடைய நிழலாக இருந்து கொண்டே இருப்பார்.

இயற்கை

இயற்கை

இயற்கை அவரை எடுத்துக் கொண்டது. ஆனால் அவர் என்னுள் ஒரு பாகமாக கலந்துவிட்டார். இருந்தவரை அனுபவித்ததையும், பெற்றதையும், கற்றதையும் நான் இருக்கும்வரை அனுபவிக்கத்தான் போகிறேன். அந்த சந்தோஷத்துடன் நான் தொடர்ந்து வாழ்கிறேன்.

கஷ்டம்

கஷ்டம்

அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். அவரிடமிருந்து கற்றுக் கொள்ளாத விஷயங்களை எல்லாம் இனிமேல் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அண்ணன் இல்லாத வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், அதற்கான பயிற்சியை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்றார் கமல்.

English summary
Kamal Haasan atended his brother Chandra Haasan's memorial meet held in Chennai today. He said it will be difficult to live without his brother.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil