பிறந்தநாளும் அதுவுமாக கோரிக்கை விடுத்த கமல்: செய்வீங்களா மக்களே?
சென்னை: தனது பிறந்தநாளான இன்று கமல் ஹாஸன் மக்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கமல் ஹாஸன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கமல்
உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு கமல் கோரிக்கை விடுக்கும் வீடியோவை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்டு
கமலின் பிறந்தநாளான இன்று உடல் உறுப்பு தானம் செய்து அதை தெரிவிக்க இணையதள முகவரி ஒன்றையும் மக்கள் நீதி மய்யம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. #HappyBirthdayNammavar #Resurrect
விக்ரம்
கமல் தயாரிப்பில் விக்ரம், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு கடாரம் கொண்டான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை கமல் நேற்று வெளியிட்டார். கடாரம் கொண்டான் படக்குழு கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
ரசிகர்கள்
கமல் ஹாஸனுக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. இதனால் #HappyBirthdayKamalHaasan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











