அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் கமல்

விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் படம் அமெரிக்காவில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பட ரிலீசுக்காக கமல் ஹாசன் அமெரிக்கா சென்றார்.
முன்னதாக அவர் தமிழக அரசின் தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். படத்தைப் பார்த்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளிப்பதாக இருந்தது. இதனால் கமல் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் கிளம்பி இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
ஆனால் இன்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும் தடை தொடர்பாக கமல் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அது அறிவுரை கூறியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications