»   »  மீடியாக்கள் இனி என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம்!- கமல் அறிவிப்பு

மீடியாக்கள் இனி என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம்!- கமல் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீடியாக்கள் என்னைத் தொடர்பு கொள்ள எந்த பிஆர்ஓவையும் அணுகத தேவையில்லை. என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம் என கமல் ஹாஸன் அறிவித்துள்ளார். இதற்காக தனி மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளார்.

கமல் ஹாஸனின் ஊடகத் தொடர்பு குறித்து இன்று அவரது சமூக வலைத் தள ஆலோசகர் ஷைலஜா குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நடிகர் கமல் ஹாசன் சார்பில் ஊடகத்தினருடன் நிகில் முருகன் உள்பட யாருக்கும் தொடர்பு கொள்ள உரிமை இல்லை. ஊடகத்தினருடனான அனைத்து தொடர்புகளும் கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் மூலமாகவே நடைபெறுகிறது. ஒவ்வொரு படத்திற்குமான விளம்பரங்கள், செய்திகளுக்கு அந்தப் படத்துக்காக நியமிக்கப்படும் பிரபலமான செய்தித் தொடர்பாளர்கள் உபயோகப்படுத்தப்படுவார்கள்.

Kamal's announcement on his media relations

நடிகர் கமலின் பேட்டி, ஊடக தொடர்பு, பட விளம்பரங்கள் தொடர்பாக ikamalhaasan@gmail.com எனும் ஈ.மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு நிகில் முருகன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "கமல் ஹாஸனின் ஊடகத் தொடர்பு பணியிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் என்பதை கடந்த டிசம்பர் மாதமே அனைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்திவிட்டேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actor Kamal Hassan has announced that here after media could contact him directly without the help of any PROs.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil