கமல் 60: கமலும் காதல்களும்

By Mayura Akilan

எழுபதுகளில் காதல் இளவரசனாய் திரை உலகில் கொடி கட்டிப்பறந்த கமல்ஹாசன் நாற்பது ஆண்டுகளாய் தமிழ் திரை உலகின் காதல் மன்னனாய் வலம் வருகிறார்.

இன்றைக்கு மணிவிழா கொண்டாடினாலும் திரை உலகில் கமல், இளமையான காதல் மன்னன்தான். கமலை விட அழகான நடிகர்கள் எத்தனையோ பேர் தமிழ் சினிமாவில் வந்து போயிருந்தாலும், கமலின் நடிப்பையும், அவரின் திரை உலக காதலையும் விஞ்ச யாரும் வரவில்லை என்பதுதான் உண்மை.

கமலின் நாயகிகள்

கமலின் நாயகிகள்

அம்பிகாவோ, அமலாவோ, இன்றைய ஆன்ட்ரியாவோ யாராக இருந்தாலும் கமலின் காதல் மீட்டர் அளவிடமுடியாதது.

கமலின் நடிப்பிற்காக சினிமா பார்க்கும் ரசிகர்கள் சிலர் இருக்கலாம். கமலின் காதலுக்காக சினிமா பார்க்கும் ரசிகர்கள்தான் அதிகம்.

கமலும் காதல்களும்

கமலும் காதல்களும்

அபூர்வ ராகங்களில் தன்னைவிட வயது மூத்த ஸ்ரீ வித்யாவை காதலிப்பது தொடங்கி இன்றைக்கு தன் மகளை விட குறைவான வயது உடைய கதாநாயகிகள் வரை திரையில் கமலுடன் ரொமான்ஸ் செய்கின்றனர்.

ஏக் துஜே கேலியே

ஏக் துஜே கேலியே

பாலிவுட் உலகில் ஆண்டுக்கணக்கில் ஓடிய பல ரொமான்ஸ் படங்கள் வந்திருந்தாலும், கமலின் ஏக் துஜே கேலியே படத்தை மிஞ்ச இன்னும் ஒரு படம் கூட வரவில்லை என்பதுதான் உண்மை.

சலங்கை ஒலி

சலங்கை ஒலி

சலங்கை ஒலி படத்தில் கமலின் காதல் புதுவிதமானது. இதில் நடனத்தோடு தன் நடிப்பிலும் தனி முத்திரை பதித்த கமல் இன்னமும் ரசிகர்கள் கண்முன் நிழலாடுகிறார்.

சாகர்

சாகர்

சாகர் படத்தில் டிம்பிள் கபாடியா உடனான காதல் கமலை தனி பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கும்.

புன்னகை மன்னன்

புன்னகை மன்னன்

புன்னகை மன்னன் பாலச்சந்தர் படம் என்றாலும், ரேவதி, ரேகா உடனான காதல் கெமிஸ்ட்ரியில் தனது தனி முத்திரையை பதித்திருப்பார் கமல்.

தேவர் மகன்

தேவர் மகன்

ஜாதி மோதல்களைச் சொல்லும் படம் என்றாலும் கவுதமியுடனான காதல் கமலுக்கு தனி ட்ராக். அதுவே ரேவதியுடனான ரொமான்சும் தனி ரகம். கமலின் ரொமான்ஸ் பற்றி எழுதினால் ஒருசில பக்கங்கள் மட்டுமே போதாது. எனக்குத் தெரிந்த, நான் ரசித்த சில படங்களை மட்டுமே இந்த பிறந்தநாளில் எழுதியுள்ளேன்.

அதே கமல்

அதே கமல்

வயசானாலும் ரொமான்ஸ் மாறவேயில்லை என்று இன்றைக்கு கமலைப் பார்த்து கூறுகின்றனர் அவரது ரசிகர்கள். கண்ணாலே காதல் கவிதை சொல்லும் நாயகன் என்றால் அது கமல்தான்... ரொமான்ஸ் காட்சிகளில் கமலை மிஞ்ச இன்னும் ஒரு நடிகர் வரவில்லை என்றுதான் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

உலக நாயகன் என்று கமலை வாழ்த்தினாலும்...இன்றைக்கும் அவர் காதல் நாயகன்தான்.

ஹேப்பி பர்த்டே கமல்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X