திடீரென டிரெண்டிங் ஆன கமலஹாசன்...இவர் செய்த வேலை தானா அது
சென்னை : பொதுவாக ஏதாவது முக்கிய நிகழ்வு, பரபரப்பு தகவல், சினிமா நடிகர் - நடிகைகள் தொடர்பான பிறந்தநாள், புது பட ரிலீஸ், டிரைலர், டீசர் ரிலீஸ் உள்ளிட்டவை காரணமாக ட்விட்டரில் அவர்களின் ரசிகர்கள் அல்லது ஹேட்டர்கள் ஏதாவது ஒரு ஹாஷ்டேக்கை உருவாக்கி, அதை டிரெண்டிங்கும் ஆக்கி விடுவார்கள்.
அப்படி சமீபத்தில் அஜித், வலிமை, ஹச்.வினோத், ரஜினிகாந்த், அண்ணாத்த, அண்ணாத்த டிரைலர், நயன்தாரா, மாநாடு, பிக்பாஸ் தமிழ் 5 உள்ளிட்ட ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு, அதிக முறை டிரெண்டிங் ஆக்கப்பட்டன. தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக கூட இந்த ஹாஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்துள்ளன.

டிரெண்டிங்கில் கமல்
இந்நிலையில் நேற்று திடீரென கமலஹாசன் என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டது. இதனால் என்ன காரணம் என புரியாமல் பலர் குழம்பிப் போயினர். கமல் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் விக்ரம் படத்தின் டீசரை கமல் பிறந்தநாளன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

செம ஸ்டைலான கமல்
இதற்காக தான் கமல் டிரெண்டிங் வந்தாரா என்றால், இல்லையாம். தற்போது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் கமல் வந்து, அந்த வாரம் நடந்த நிகழ்வுகள், பிரச்சனைகள் பற்றி பேசுவார். எலிமினேட் ஆக போவது யார் என்பதை அறிவிப்பார். அப்படி இந்த சீசனில் வார இறுதி நாட்களில் வரும் கமல், வழக்கத்தை விட செம ஸ்டைலான லுக்கில் தோன்றி வருகிறார்.

இவர் தான் காரணமா
வார இறுதி நாட்கள் எபிசோடிற்காக ஸ்டைலான உடைகளில் தோன்றி கமல் நடத்தும் ஃபோட்டோஷுட்கள் வைரலானது தான் கமலஹாசன் ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டதற்கு காரணமாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அணிந்து வரும் ஆடைகளை வடிவமைத்து வருபவர் பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்யும் அம்ரிதா ராம் தான். இவர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட டிரஸ்களை அணிந்த கமலின் ஃபோட்டோக்களை அதிகம் பகிர்ந்து தான், ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

ஆடை வடிவமைத்தது எப்படி
கமலின் ஆடை பற்றி அம்ரிதாவிடம் கேட்ட போது, பொதுவாக நடிகர் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமாக ஆடை அடைய விரும்புவார்கள். அது போல் கமல் சார் தற்போது எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அவரிடம் பேசிக் அவுட்லைன் மட்டுமே கேட்டேன். அதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரியும், அதோடு என்னுடைய இன்புட்களை கலந்து அவரின் ஆடைகளை வடிவமைத்து வருகிறேன்.
Recommended Video

கமலுக்கு தெரியும்
கடந்த மூன்று ஆண்டுகளாக கமல் சாருடன் பணியாற்றி வருகிறேன். அவருடன் பணியாற்றுவது மிக எளிமையானது. சமீபத்தில் ஒரு மியூசிக் ரியாலிட்டி ஷோவின் இறுதிப் போட்டிக்காக இந்தோ - வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒரு ஆடையை வடிவமைத்தேன். அதை பெரிதும் பாராட்டினார். எந்த மாதிரி துணிகள், வண்ணங்கள் அணிந்தால் தனக்கு சரியாக இருக்கும் என கமல் சாருக்கு நன்றாக தெரியும்.

மிக கவனமான வடிவமைப்பு
மொத்த ஷோவுக்கான ஆடைகளையும் முன்பே முடிவு செய்து விடுவது கிடையாது. அந்தந்த வாரம் அல்லது அதிகபட்சம் அடுத்த எபிசோடிற்கானது மட்டும் தான் முன்பே முடிவு செய்வோம். ஒவ்வொரு முறையும் கமல் சாருடன் கலர் உள்ளிட்ட அனைத்தையும் ஆலோசனை செய்து தான் ஆடைகளை வடிவமைப்பேன். கமல் மிகப் பெரிய ஆசிரியர். பல படங்களை பார்க்க சொல்லி எனக்கு டிப்ஸ் கொடுப்பார். அது நேரடி ரெஃபரன்ஸ் கிடையாது. இருந்தாலும் முந்தைய சீசன்களில் இருந்தது போன்ற லுக் இருந்து விட கூடாது என மிக கவனமாக ஆடைகளை வடிவமைத்து வருகிறோம்.

இதெல்லாம் கமலுக்கு பிடிக்கும்
கமல் சார் ப்ரவுன் சேட் கொண்டது, ஆலிவ், ஜெர்மன் கிரே, கருப்பு போன்றவை கலந்த ஆடைகளை விரும்புவார். ஒரு குறிப்பிட்ட கலர்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை மிக கண்டிப்பாக இருப்பார். அவரது லிமிடேஷன் மிக குறைவு என்பதால் ஒரு ஆடை வடிவமைப்பாளராக எனக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். ஸ்டைலாகவும் இருக்கனும், கம்ஃபர்டாகவும் இருக்கனும் என விரும்புவார். ஒரு விஷயத்தை யாருக்காகவும் என்னால் இழக்க முடியாது. சரியான பேலன்ஸில் இருக்க வேண்டும் என கமல் சார் அடிக்கடி சொல்லுவார் என்றார்.


Click it and Unblock the Notifications











