இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை...! - கமல் ஹாஸன்

By Shankar

தமிழக அரசியல் நிலவரம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் எழுதி வரும் கமல் ஹாஸன், இன்றும் ஒரு கமெண்டைப் பதிவு செய்துள்ளார்.

விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார் கமல் ஹாஸன். தமிழ் சினிமா நடிகர்களில் ஓரளவு துணிச்சலாக இந்த வேலையைச் செய்தவர், செய்து கொண்டிருப்பவர் இப்போதைக்கு கமல் ஹாஸன்தான். அவரது கருத்துகள் பல சமயங்களில் புரிவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டாலும், ஆட்சிக்கு எதிரான குரல் அது என்பது மட்டும் எல்லோருக்கும் புரிகிறது.

Kamal's tweet on Edappadi Palanisamy govt's floor test

சசிகலா முதல்வராக முயன்றபோது, நேரடியாக, ஓ பன்னீர் செல்வமே முதல்வராகத் தொடரட்டும் என்று கூறினார் கமல்.

இன்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரும் நிலையில், கமல் போட்டுள்ள ட்வீட் இது:

"இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்."

கமலின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்து இயக்குநர் சீனு ராமசாமி, "இரவில் ரசியமாக நரிகள் பரியானது சொக்கப்பன் நாட்டில்....பொதுவில் பகலில் உருமாறுமா.. நரிகளுக்கும் வெடகமுண்டு மனசாட்சியுண்டு," என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X