பாதித்த நூல் பற்றி கேட்டால் பூணூல் பற்றி பேசிய கமல் ஹாஸன்
சென்னை: தன்னை மிகவும் பாதித்த நூல் எது என்று தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.
உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ரசிகர்கள் கமல் எதிர்பார்க்காத சில கேள்விகளை எல்லாம் கேட்டார்கள்.
இருப்பினும் அவர் பொறுமையாக பதில் அளித்தார். அவர் ட்விட்டரில் அளித்த சில பதில்கள் இதோ,
அடுத்த தலைமுறை
ஜாதியை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்வீர்கள் என்ற கேள்விக்கு, என் மகள்களை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்ப படிவத்தில் ஜாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட மறுத்துவிட்டேன். இந்த முறை மூலமே அடுத்த தலைமுறைக்கு செல்லும். முன்னேற்றத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். கேரளா ஏற்கனவே துவங்கிவிட்டது என்று பதில் அளித்துள்ளார் கமல்.
மருத்துவக் கழிவுகள்
கேரளாவில் இருந்து அதிக அளவில் மருத்துவக் கழிவுகள் தமிழகத்திற்கு கொண்டு வந்து கொட்டப்படுவது குறித்து கமலிடம் கேட்கப்பட்டது. இது குறித்து நான் ஏற்கனவே கேரள முதல்வரிடம் பேசினேன், மீண்டும் பேசுவேன். இரு மாநிலங்களின் பிரச்சனைகளும் தீரும் வகையில் தீர்வு காண வேண்டும் என்றார்.
பூணூல்
நீங்கள் படித்த நூலில் உங்களை பாதித்தது எது என்று கேட்டதற்கு பூணூல் அதனாலேயே அதை தவிர்த்துவிட்டேன் என்று பதில் அளித்துள்ளார் கமல்.
பதில்
படித்த நூலை பற்றி கேட்டால் பூணூல் பற்றி பேசுகிறீர்களே கமல் சார் என்று ட்விட்டரில் ஒரு பெரிய விவாதமே நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications