இஃபி: 7 படங்களைத் திரையிட வேண்டும் என நான் கோரவில்லை - கமல்

By Staff

Kamal
கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (இஃபி) எனது படங்கள் ஏழு திரையிட வேண்டும் என நான் கோரவில்லை. 3 படங்களில் என்னைப் பற்றித் தெரிவித்து விட முடியாதே, குறைந்தபட்சம் 7 படங்களாவது இருக்கட்டுமே என்று எனது நண்பர்கள் தெரிவித்த கோரிக்கைதான் அது என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

பனாஜியில் நவம்பர் 23ம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் திரையுலகில் 50 ஆண்டுகளை முடித்துள்ள கமல்ஹாசன், ஆஷா பரேக், ஷர்மிளா தாகூர், செளமித்ரா சாட்டர்ஜி ஆகியோரைக் கெளரவிக்கும் வகையில் இவர்கள் நடித்த படங்கள் தலா மூன்றை தனியாக திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது இந்தப் பட்டியலில் கமல்ஹாசன் இடம் பெறவில்லை. கமல்ஹாசன் தரப்பில் 7 படங்களைத் திரையிட வேண்டும் என கோரியதாகவும், ஆனால் அப்படி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், விழாவுக்கான இயக்குநர் எஸ்.எம். கான் கூறியிருந்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கமல்ஹாசன் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் அப்படி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனது நண்பர்கள்தான், 3 படங்களில் என்னை அடக்கி விட முடியாதே, 7 படங்களாவது இருக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

எனது நண்பர்கள்தான் அதை விரும்பினார்கள். என்னிடம் சிலர் பேசுகையில், ஏழு படங்களாக இருக்கட்டும் என வலியுறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டனர். டெல்லியில் உள்ள எனது நண்பர்கள், நலம் விரும்பிகளின் ஆசை இது.

மேலும் இந்த ஏழு படங்களையும் டெல்லி நிகழ்ச்சியில் தனியாக திரையிட வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பம் என்றார் கமல்.

டெல்லியில் பிரத்யேகமாக கமல்ஹாசன் குறித்த திறனாயவு அடுத்த ஆண்டு பி்ப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக எஸ்.எம்.கான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X