சூப்பர்ஸ்டாரின் படத்தை புரமோட் செய்யும் உலகநாயகன்!
தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் பட டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் "தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்" திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அந்நிகழ்ச்சி முடிந்ததும் இந்தியன் 2 திரைப்பட வேலைகளில் இறங்கி பேக் டூ ஃபார்ம் என கையுயர்த்த தயாராகி வருகிறார் கமல்.

சினிமாவிற்கு மொழியில்லை.. சினிமாவே ஒரு மொழிதான் என்பதை எப்போதும் மனதில் வைத்து செயல்படுபவர் கமல்ஹாசன். சமீபத்தில் அவருடைய விஸ்வரூபம் 2 படத்தினை புரொமோட் செய்ய இந்தி மற்றும் தெலுங்கு பிக்பாஸ் வீட்டில் முகாமிட்டது நினைவிருக்கலாம்.
இப்போது அமீர்கானின் "தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்" திரைப்பட டிரைலரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கால்பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசாத்தின் கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.
பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தஷன், தூம் 3 படங்களை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், அமீர்கான், காத்ரினா கைப், ஃபாத்திமா சனா ஷேக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அமிதாப் பச்சன் ஆக்ஷனிலும், அமீர்கான் நடிப்பிலும் பின்னியிருப்பது டிரைலரில் தெரிகிறது. சமீபத்தில் வெளியான இந்தி டிரைலர் 17 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்படத்தின் தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











