»   »  கமலின் அடுத்த பட கதை என்ன தெரியுமா?

கமலின் அடுத்த பட கதை என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து த்ரில்லர் படங்கள் பண்ணுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல். இரண்டு ஆண்டுகளுக்கு முன் விஸ்வரூபம். இப்போது உத்தமவில்லன்.

அவரது அடுத்த இரு படங்களான விஸ்வரூபம் 2, பாபநாசம் படங்கள் கூட த்ரில்லர் வகைதான்.

பீகே

பீகே

இந்த நிலையில் கமலின் புதிய படம் குறித்த செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. பீகே ரீமேக் பேச்சுவார்த்தைகள் நிலையில், வேறு இரு படங்களில் நடிப்பது மற்றும் இயக்குவது குறித்தும் கமல் பேசி வருகிறாராம்.

பிரபுதேவா

பிரபுதேவா

இவற்றில் ஒரு படத்தை பிரபு தேவா இயக்கப் போவதாக கடந்த வாரம் செய்தி வெளியாகியது. பிரபு தேவா தரப்பில் கேட்டால் அவரைப் போலவே மழுப்பலாகச் சிரிக்கிறார்கள்.

அடுத்த த்ரில்லர்..

அடுத்த த்ரில்லர்..

இன்னொரு பக்கம் ஒரு முழுநீள த்ரில்லர் படத்தை கமலே தயாரித்து , இயக்க உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியில்...

இந்தியில்...

சமீபத்தில் பிரபல இந்தி தயாரிப்பாளர்கள் விரேந்தர் அரோரா, அர்ஜுன் கே கபூர் இருவரையும் சந்தித்த கமல், ஒரு முழுமையான இந்திப் படத்தை இயக்கி நடிக்க விரும்புவதாகக் கூறி, கதையையும் சொல்லியிருக்கிறார்,

கருப்புப் பணம்

கருப்புப் பணம்

அவர்களுக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டதால், இந்தி பட வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கதை அரசியல் , கருப்பு பணம் சார்ந்த கதையாம்.

English summary
Kamal Hassan is showing great interest in acting and directing thriller movies and all his forth coming movies are thriller genre.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil