த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்... நெல்லைத் தமிழ் பேசும் கமல்!

By Shankar

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நெல்லைத் தமிழ் பேசி நடிக்கவிருக்கிறார் கமல் ஹாஸன்.

மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸனும் கவுதமியும் நடிக்கிறார்கள்.

நெல்லை

நெல்லை

நெல்லையை கதைக் களமாக வைத்து இந்த படத்தை எடுக்கப் போகிறார்கள். திருநெல்வேலியில் வசிக்கும் நடுத்தர தம்பதி கேரக்டரில் கமல், கவுதமி நடிக்கின்றனர். கமல், படம் முழுவதும் நெல்லை தமிழ் பேசி நடிக்கப் போகிறாராம்.

பரமக்குடிகாரர்!

பரமக்குடிகாரர்!

நெல்லைக்கு பக்கத்து மாவட்டமான ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கமல். பரமக்குடியில் பிறந்து வளர்ந்தவர். அதனால் நெல்லை வட்டார வழக்கு அவருக்கு அத்தனை கஷ்டமான விஷயமில்லை.

பல வழக்கு மொழிகள்

பல வழக்கு மொழிகள்

பல படங்களில் சென்னைத் தமிழ், சதி லீலாவதியில் கோவைத் தமிழ், விருமாண்டியில் மதுரைத் தமிழ், தெனாலியில் ஈழத் தமிழ் என பல வட்டார வழக்கு மொழிகள் பேசி அசத்தியவர் கமல் என்பது நினைவிருக்கலாம்.

இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கமல் ஏற்கெனவே இளையராஜாவிடம் பேசியுள்ளார். இன்னொரு தரப்பு ஜிப்ரான் இசையமைக்கக் கூடும் என்கிறார்கள்.

உத்தம வில்லனுக்குப் பிறகு

உத்தம வில்லனுக்குப் பிறகு

தற்போது உத்தமவில்லன் படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் த்ரிஷ்யம் பட வேலைகளில் இறங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X