»   »  உத்தமனும் நானே.. வில்லனும் நானே.. அதான் உத்தம வில்லன்!- கமல்

உத்தமனும் நானே.. வில்லனும் நானே.. அதான் உத்தம வில்லன்!- கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உத்தம வில்லன் படத்தில் உத்தமனும் நான்தான், வில்லனும் நான்தான். ஒவ்வொரு நடிகருமே இந்தப் படத்தில் அவர்களைப் பார்ப்பார்கள் என்றார் கமல் ஹாஸன்.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்' படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.


திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


இந்நிலையில், உத்தமவில்லன் படம் குறித்து நடிகர் கமல், இன்று பத்திரிகையாளர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.


மகிழ்ச்சியான தருணம்

மகிழ்ச்சியான தருணம்

படம் குறித்து அவர் கூறுகையில், "எனது இல்லத்தில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவதற்கு காரணம், நான் கே.பாலச்சந்தர் அவர்களை முதன்முதலாக சந்திக்கச் சென்றது இந்த இல்லத்தில் இருந்துதான். அதுபோல், இந்த இல்லத்தில் சோகமான நிகழ்வுகளுக்காகவும் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறேன். இது சோகமான நிகழ்வுகளுக்கான சந்திப்பு இடமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான், தற்போது இந்த சந்தோஷமான விஷயத்திற்காகவும் இந்த இல்லத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று பேச்சை தொடங்கினார்.


நானே...

நானே...

‘உத்தமவில்லன்' படம் என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத படம். இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. இதில் உத்தமனும் நான்தான். வில்லனும் நான்தான். இந்த படத்தை எந்தவொரு நடிகர் பார்த்தாலும், அந்த நடிகரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இது பிரதிபலிக்கும். வில்லுப்பாட்டு இந்த படத்தில் ஒரு முக்கிய இடம்பெற்றுள்ளது.


ரமேஷ் அரவிந்த்

ரமேஷ் அரவிந்த்

ரமேஷ் அரவிந்த் என்னிடம் பல கதைகளை கூறியிருந்தார். அவரும் நானும் பல கதை விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். அப்போது, அவர் சொன்ன உத்தமவில்லனின் கதை பிடித்துப்போனதால்தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.


கே பாலச்சந்தர்

கே பாலச்சந்தர்

இப்படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மார்க்கதரிசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் அவரை இந்த படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேட்டபோது, யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டு அதன்பிறகுதான் ஓ.கே. சொன்னார். 10 நாட்கள் அவரிடம் கால்ஷீட் கேட்டேன்.


சீக்கிரம் முடிக்கச் சொன்னார்

சீக்கிரம் முடிக்கச் சொன்னார்

படப்பிடிப்பை சீக்கிரமாக முடி என்று என்னை அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் டப்பிங்கை சீக்கிரமாக முடி என்று அவசரப்படுத்தினார். டப்பிங் முடிந்ததும், படத்தை எப்போது வெளியே கொண்டு வரப்போகிறாய் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால் இந்த படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தார்.


சண்டை- வன்முறைக் காட்சிகள் இல்லை

சண்டை- வன்முறைக் காட்சிகள் இல்லை

பாலச்சந்திரின் நிறைய படங்கள் சோகமும், சிரிப்பும் கலந்து இருக்கும். அதுபோல் இந்த படத்திலும் அனைத்தும் கலந்து இருக்கும். சண்டைகள், வன்முறைகள், கார் ஆகாயத்தில் பறப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இல்லை. வைக்கக் கூடாது என்று இல்லை. இந்த கதைக்கு அது பொருத்தமாக இல்லை என்பதற்காகத்தான் வைக்கவில்லை.


என் நாயகிகள்

என் நாயகிகள்

இப்படத்தில் நடித்திருக்கும் ஆண்ட்ரியா, பூஜாகுமார், ஊர்வசி எல்லோருமே என்னுடைய கதாநாயகிகள்தான். என்னுடைய டூயட் பாடினால்தான் அவர்கள் கதாநாயகிகள் இல்லை.


ஜெயராம்

ஜெயராம்

அதுபோல், இந்த படத்தில் ஜெயராம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறார். அதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருக்கும் இப்படம் பேசும்படமாக இருக்கும்," என்றார்.


அடுத்து..

அடுத்து..

உத்தம வில்லன் வெளியான பிறகுதான் பாபநாசம் மற்றும் விஸ்வரூபம் 2 வெளியாகும் என்றார் கமல் ஹாஸன்.


English summary
Kamal Hassan says that he is playing as Uthaman and Villain in Uthama Villain and assured that the movie would be a memorable for everyone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil