»   »  வேலை நிறைய இருக்கு.. ட்விட்டர் பக்கம் அடிக்கடி வர மாட்டேன்! - கமல் ஹாஸன்

வேலை நிறைய இருக்கு.. ட்விட்டர் பக்கம் அடிக்கடி வர மாட்டேன்! - கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட வேலைகள் இருப்பதால் இனி அடிக்கடி ட்விட்டர் பக்கம் வரமாட்டேன் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத் தளங்களை கிட்டத்தட்ட அத்தனை நடிகர்களுமே பயன்படுத்தி வருகின்றனர். பிரஸ் மீட் வைத்து தங்கள் கருத்துக்களைச் சொல்வதை விட, இப்படி சமூக வலைத் தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்வது வசதியாகப் போய்விட்டது பிரபலங்களுக்கு.

Kamal stays away from twitter

பேஸ்புக்கில் தனது கருத்துக்களைச் சொல்லி வந்த கமல் ஹாஸன், சமீபத்தில்தான் ட்விட்டர் பக்கம் வந்தார். கடந்த ஜனவரி 26-ம் தேதி தேசிய கீதம் பாடி அவர் தனது ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கினார்.

கடந்த ஒரு மாதத்தில் அவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர ஆரம்பித்தனர். பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களை கமல் தொடர்ந்து எழுதி வந்தார்.

ஆனால் தற்போது புதிய பட வேலைகள் வந்துவிட்டதால் இனி தொடர்ந்து ட்விட்டரில் எழுத முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ரசிகர்களின் ட்வீட்டுக்களை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன் என்று கமல் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் அடுத்த படம் அமெரிக்காவில் படமாகிறது. பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

English summary
Kamal Hassan says that he would stay away from twitter due to his new movie work.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil