சிவாஜியின் மடியில், எம்.ஜி.ஆரின் தோளில் வளர்ந்த நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா?: கமல்

By Siva

சென்னை: சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்த தான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா என்று சினிமா நூற்றாண்டு விழாவில் கமல் ஹாஸன் தெரிவித்தார்.

சினிமா நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்தார். விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாஸனுக்கு சிறப்பு விருதை ஜெயலலிதா வழங்கினார்.

Jayalalithaa presenting an award to actor Kamal Hasan during the innaguration of the four-day Centenary Celebrations of Indian Cinema

விழாவில் பேசிய கமல் கூறுகையில்,

நான் சினிமா துறையில் 50 ஆண்டுகளாக உள்ளேன். இருப்பினும் நான் இன்னும் சின்ன குழந்தை தான். நான் குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் வெற்றி பெறாமல் இருக்க முடியுமா?. சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் உள்ளனர். ஒருவர் சிவாஜி கணேசன் மற்றொருவர் கே. பாலசந்தர்.

இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் என்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறை நடிகர், நடிகைகள் எங்களை விட பெரிய அளவில் வளர வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X