ஆரம்பம் படம் பார்த்த கமல், சூர்யா
சென்னை: நடிகர்கள் கமல் ஹாஸன், சூர்யா ஆகியோர் அஜீத்தின் ஆரம்பம் படத்தை பார்த்துள்ளனர்.
தீபாவளிக்கு ரிலீஸான அஜீத் குமாரின் ஆரம்பம் படம் அவரது ரசிகர்கள் தவிர திரையுலக பிரபலங்களையும் ஈர்த்துள்ளது. ஆரம்பம் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் ஏற்கனவே ரூ.50 கோடியை வசூலித்துவிட்டது. மேலும் ரூ.100 கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆரம்பம் படத்தை பார்த்த சில பிரபலங்களை பார்ப்போம்.

ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் ஆரம்பம் படத்தை பார்த்துவிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டி எழுதியிருந்தார். ஃபேஸ்புக் கணக்கை துவங்கியதும் அவர் முதன்முதலில் எழுதியது ஆரம்பம் படத்தை பற்றி தான்.

கமல்
உலக நாயகன் கமல் விஸ்வரூபம் 2 பட வேலைகளில் பிசியாக உள்ளார். இருப்பினும் இதற்கிடையே ஆரம்பம் படத்தை பார்த்துள்ளார்.

சூர்யா
சூர்யா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்னை சத்யம் சினிமாஸில் ஆரம்பம் படம் பார்த்துள்ளார்.

லக்ஷ்மி ராய்
அஜீத்தின் மங்காத்தா படத்தில் நடித்த லக்ஷ்மி ராய் ஆரம்பம் படத்தை பார்த்துவிட்டு வந்து ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

லிங்குசாமி
ஆரம்பம் படத்தை பார்த்த லிங்குசாமி படம் அருமை என்று தெரிவித்துள்ளார். படத்தில் ஆர்யா மிகவும் கூலாக உள்ளார் என்று அவர் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











