பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவனாக இனிமேல்தான் ஆக வேண்டும் - கமல்

By Shankar

சென்னை: பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவனாக இனிமேல்தான் ஆக வேண்டும், என கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ

பத்மஸ்ரீ

ஏற்கெனவே மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் கமல்ஹாஸன். அவரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பத்மஸ்ரீ கமல் ஹாஸன் என்றே அழைத்து வந்தனர்.

பத்மபூஷண்

பத்மபூஷண்

இந்த ஆண்டு பத்மபூஷண் விருது அவருக்குக் கிடைத்துள்ளது. நாட்டின் மூன்றாவது உயரிய விருது இது.

ரஜினிக்கு

ரஜினிக்கு

தமிழ் நடிகர்களில் இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பத்மபூஷண் விருது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா, ஏஆர் ரஹ்மானுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கமல் அறிக்கை

கமல் அறிக்கை

பத்மபூஷண் விருது கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "பல துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷண் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேறாக நான் கருதுகிறேன்.

இனிமேல்தான்

இனிமேல்தான்

அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது.

வைரமுத்துவுக்கு வாழ்த்து

வைரமுத்துவுக்கு வாழ்த்து

நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு, பத்மபூஷண் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் முக்கியமாக என் நண்பர் வைரமுத்துக்கும் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X