நீங்கள் வெல்ல வேண்டும் பேபி.. கம்யூ. வேட்பாளருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
திருவனந்தபுரம் கேரளாவில் கொல்லம் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ஏ. பேபி வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேபிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது...

நான் பேபியின் நண்பன்
நட்புதான் பேபியின் மதம். நான் அவரது நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.

கலாச்சார அக்கறை மிக்கவர்
இந்திய தேசத்தில் கலை, இலக்கியம், இசை, திரைப்படம் இத்தனை துறைகளின் வளர்ச்சிக்கும் நன்மைக்குமாக இவ்வளவு அதிக அக்கறை கொண்டுள்ள மற்றொருவர் இல்லை. இந்தக் கலாச்சார அக்கறையிலிருந்துதான் அவரது அரசியல் உருவாகுகிறது.

விசாலமான அறிவியல் அடிவானம்
அவர் விசாலமான அறிவியல் அடிவானத்துச் சொந்தக்காரர். திரைப்படம் குறித்த அவரது ஆழ்ந்த அறிவு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மனித நேயர்
மனிதநேயத்திற்கும் மனித உறவுகளுக்கும் உன்னதமான பெருமை சேர்க்கிற மனிதநேயர் பேபி. பேபி வெற்றிபெறுவது நாட்டுக்கு அவசியமாகும் என்று கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











