நண்பன் 'சிவாஜி - தி பாஸுக்கு' விஸ்வரூப கமலின் வாழ்த்து!

நண்பர் ரஜினி இன்று போல் என்றும் வாழ்க என்று அவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
ரஜினி - கமல் இருவரின் நட்பும் உலகறிந்தது. இருவரும் தங்களது முக்கிய நிகழ்வுகளில் பரஸ்பரம் பங்கேற்று வாழ்த்திக் கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு கமல் பிறந்த நாளில் பங்கேற்ற ரஜினி, அவர் வைத்த விருந்தில் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் கமலுடன் செலவழித்தார்.
இப்போது கமலின் முறை. சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், இன்று வெளியாகும் ரஜினியின் சிவாஜி 3 டி யை வாழ்த்தும் விதமாகவும் இன்று அனைத்து தமிழ், ஆங்கில தினசரிகளிலும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்.
நண்பர் சிவாஜி - தி பாஸ் 3டி அவர்கட்கு விஸ்வரூபம் குழுவினரின் வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் நலமுடன் வாழ்க!
-என்று அதில் தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications