2.0 ட்ரெய்லர் வெளியீடு: நண்பன் ரஜினியை வாழ்த்திய கமல்
சென்னை: 2.0 படம் ரஜினியின் திரைவாழ்வில் இன்னும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று கமல் ஹாஸன் வாழ்த்தியுள்ளார்.
2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

அந்த வீடியோவில் கமல் கூறியிருப்பதாவது,
வணக்கம். லைகா சுபாஷ் அவர்களுக்கும், ரஜினி அவர்களுக்கும், ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கும், அக்ஷய் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். ரஜினி அவர்களின் திரைப்பட வாழ்க்கையில் இன்னும் ஒரு மைல் கல்லாக இந்த திரைப்படம் அமையும் என்று அவரின் ரசிகர்களை போன்று நானும் எதிர்பார்க்கிறேன். அதற்கான வாழ்த்துக்கள். உழைப்புக்கான ஊதியம் கண்டிப்பாய் கிடைக்கும் என்று நண்பர் ஷங்கர் அவர்களிடம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படத்தின் சுமையை எல்லாம் தன் தோளில் சுமந்து, இதை நல்ல ஒரு படமாக செதுக்கி இருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.
2.0 படத்தில் வில்லன் அக்ஷய் குமார் கதாபாத்திரத்தில் நடிக்க கமல் ஹாஸனிடம் தான் ஷங்கர் கேட்டார். ஆனால் கமல் ஆர்வம் காட்டாததால் அக்ஷய் குமாரை நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











