twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஜாவிடம் சம்பளத்தை திருப்பி தரும் கமல் தயாரிப்பாளர் காஜா மைதீன் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளதைத் தொடர்ந்து, அவரிடமிருந்துவேட்டையாடு விளையாடு படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் பணமான ரூ. 2.50 கோடியைத் திருப்பிக் கொடுக்க நடிகர்கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.பொற்காலம், ஜனா, தேவதையைக் கண்டேன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட ஏராளமான படங்களைத் தயாரித்தவர் காஜா மைதீன்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கானஏற்பாடுகளை காஜா மைதீன்தான் செய்தார்.அவரது ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தற்போது விஜயகாந்த்தை வைத்து பேரரசு படத்தைத் தயாரித்து வருகிறது.கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்திற்கு பூஜை போட்டுள்ளார் காஜா.இந் நிலையில்தான் அவரும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.அதிகமான கடன் நெருக்கடியும், பேரரசு படம் பாதியிலேயே நின்று போனதுமே காஜா மைதீனின் இந்த தற்கொலை முடிவுக்குக்காரணம் எனக் கோலிவுட்டில் கூறுகின்றனர்.விஜயகாந்த், தனக்கு பேசப்பட்ட சம்பளப் பணத்தை காஜா மைதீன் தர தாமதம் செய்கிறார் என்று கூறி பேரரசு படத்தை பாதியில்நிறுத்தி விட்டு சொந்தப் படத்தில் நடிக்கப் போய் விட்டாராம்.தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ள காஜா மைதீன் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரது மனைவி ஆம்னிகுணமடைந்து விட்டார்.கணவருக்குத் துணையாக அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நிலையில் காஜா மைதீனின் நிலையை அறிந்தகமல்ஹாசன், அவரிடமிருந்து அட்வான்ஸ் சம்பளமாக வாங்கிய ரூ. 2.50 கோடியை திருப்பித் தர முடிவு செய்துள்ளாராம்.இந்தப் பணம் காஜாவின் பிரச்சினைகளைத் தீர்க்க ஓரளவு உதவும் என்பதால் இம் முடிவை கமல் எடுத்திருப்பதாககூறுகிறார்கள். அதேபோல, வேட்டையாடு விளையாடு பட இயக்குனர் கெளதம் மேனனும் தான் வாங்கிய அட்வான்ஸ்சம்பளமான ரூ. 1 கோடியை காஜாவிடம் திருப்பித் தர முடிவு செய்துள்ளார்.பிரச்சினைகளிலிருந்து காஜா வெளிவந்த பிறகு வேட்டையாடு விளையாடு படத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றுகமலும், கெளதம் முடிவு செய்துள்ளார்களாம்.நடிகர்களால் அழிந்தேன்:இதற்கிடையே, நடிகர்களால்தான் நான் இந்த நிலைக்கு ஆளானேன் என்று காஜா மைதீன் கூறியுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை நெருங்கிய நண்பர்கள் சிலர் சந்தித்துப் பேசியபோது அவர்களிடம் காஜாகூறுகையில்,நன்றாகத்தான் இருந்தேன். வெற்றிப் படங்களைக் கொடுத்தபோது எதிரிகள் யார் என்று தெரியவில்லை. ஆனால் தோல்விப்படங்களைக் கொடுத்தபோதுதான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.நடிகர்களால்தான் நான் இந்த நலைக்கு ஆளானேன். அவர்களால்தான் அழிந்தேன். நடிகர்களால் ரொம்பவே நான் சிரமப்பட்டுவிட்டேன். மனதில் உள்ளதை எல்லாம் உடல் நலம் சரியான பிறகு வெளிப்படையாக, பகிரங்கமாக சொல்லப் போகிறேன்என்று கூறியுள்ளாராம் காஜா.தனது பிரச்சினைகள் குறித்தும், யாரால் தான் பாதிக்கப்பட்டேன் என்பதையும் கடிதம் மூலம் தயாரிப்பாளர் சங்கத்த் தலைவர்தியாகராஜனிடம் திங்கள்கிழமை தெரிவிக்கவுள்ளார் காஜா.தயாரிப்பாளர்கள் ஆவேசம்:இதற்கிடையே, நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்கவும், தயாரிப்பாளர்களை நடிகர்களின் தொல்லைகளிலிருந்து மீட்டு,தற்கொலை போன்ற சம்பவங்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுப்பது என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கஅவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.காஜா மைதீன் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன்தலைமையில் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.இதில் ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர்களினால்தான் தயாரிப்பாளர்களுக்கு பலகஷ்டங்கள் ஏற்படுகின்றன. காஜா மைதீன் போல பல தயாரிப்பாளர்கள் நடிகர்களினால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.அவர்களது சம்பளத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள்தான் நடிகர்களின்சம்பளத்தை நிர்ணயிப்பார்கள். நடிகர்களும் தயாரிப்பாளர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டனர்.ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இப்போது காஜா மைதீனுக்கு ஏற்பட்ட நிலைமைக்கு நடிகர்கள்தான்காரணம். விஜயகாந்த்தின் பேரரசு படத்திற்காக அவர் பெரும் செலவுகளை செய்து வந்தார். இதற்காக ஏகப்பட்ட கடன்களைவாங்கியிருந்தார்.ஆனால் விஜயகாந்த் திடீரென அப்படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனது மச்சான் தயாரிக்கும் சொந்தப் படமான சுதேசியில்நடிக்கப் போய் விட்டார். (இத்தனைக்கும் ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து செய்பவர் விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது)ஏற்கனவே அவருக்கு நிறைய சம்பளம் கொடுத்து சிரமப்பட்டு வந்த காஜா மைதீன் படம் பாதியில் நின்றதால் மனம் உடைந்தார்.அத்தோடு கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்திற்கும் பூஜை போட்டு விட்டார்.கடன் தொல்லை அதிகமானதால் வேட்டையாடு விளையாடு படத்தை மேற்கொண்டு தொடர முடியாமல் சிரமப்பட்டார். இப்படிபல வகைகளில் அவருக்கு நெருக்கடி அதிகமானதால்தான் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதுபோன்ற நிலைமை இனியும் கோடம்பாக்கத்தில் இருக்கக் கூடாது. எனவே நடிகர்களுக்கு கடிவாளம் போட்டே ஆகவேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் ஆவேசமாக பேசியுள்ளனர்.ஜீ.வி. தற்கொலையின்போதே நாம் உஷாராயிருக்க வேண்டும். ஆனால் அலட்சியமாக விட்டு விட்டோம். இப்போதுகாஜாமைதீன் முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவரைக் காப்பாற்றி விட்டோம். நாளையே இன்னும் பலர் இப்படிதற்கொலைக்கு முயன்றால் சினிமா உலகம் என்ன ஆவது? என்றும் பலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.பின்னர் கூட்டத்தில் பேசிய சங்கத் தலைவர் தியாகராஜன், காஜா மைதீன் முதலில் குணமாகட்டும். அதன் பிறகு அவரைசங்கத்திற்கு நேரில் வரவழைத்து என்ன பிரச்சின்ை என்று கேட்போம். அதன் பிறகு திரையுலகம் சம்பந்தமான பிரச்சினையாகஇருந்தால் அனைவரும் கூடி உறுதியாக விசாரித்து என்ன முடிவு எடுத்தால் சரியாக இருக்குமோ அந்த முடிவை தயங்காமல்எடுப்போம் என்றார்.தயாரிப்பாளர்கள்- நடிகர்கள் மோதலுக்கு கோடம்பாக்கம் தயாராகவே தெரிகிறது.

    By Staff
    |

    தயாரிப்பாளர் காஜா மைதீன் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளதைத் தொடர்ந்து, அவரிடமிருந்துவேட்டையாடு விளையாடு படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் பணமான ரூ. 2.50 கோடியைத் திருப்பிக் கொடுக்க நடிகர்கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

    Kamal Haasan பொற்காலம், ஜனா, தேவதையைக் கண்டேன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட ஏராளமான படங்களைத் தயாரித்தவர் காஜா மைதீன்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கானஏற்பாடுகளை காஜா மைதீன்தான் செய்தார்.

    அவரது ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தற்போது விஜயகாந்த்தை வைத்து பேரரசு படத்தைத் தயாரித்து வருகிறது.கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்திற்கு பூஜை போட்டுள்ளார் காஜா.

    இந் நிலையில்தான் அவரும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    அதிகமான கடன் நெருக்கடியும், பேரரசு படம் பாதியிலேயே நின்று போனதுமே காஜா மைதீனின் இந்த தற்கொலை முடிவுக்குக்காரணம் எனக் கோலிவுட்டில் கூறுகின்றனர்.

    விஜயகாந்த், தனக்கு பேசப்பட்ட சம்பளப் பணத்தை காஜா மைதீன் தர தாமதம் செய்கிறார் என்று கூறி பேரரசு படத்தை பாதியில்நிறுத்தி விட்டு சொந்தப் படத்தில் நடிக்கப் போய் விட்டாராம்.

    தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ள காஜா மைதீன் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரது மனைவி ஆம்னிகுணமடைந்து விட்டார்.

    Kaja Moideenகணவருக்குத் துணையாக அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நிலையில் காஜா மைதீனின் நிலையை அறிந்தகமல்ஹாசன், அவரிடமிருந்து அட்வான்ஸ் சம்பளமாக வாங்கிய ரூ. 2.50 கோடியை திருப்பித் தர முடிவு செய்துள்ளாராம்.

    இந்தப் பணம் காஜாவின் பிரச்சினைகளைத் தீர்க்க ஓரளவு உதவும் என்பதால் இம் முடிவை கமல் எடுத்திருப்பதாககூறுகிறார்கள். அதேபோல, வேட்டையாடு விளையாடு பட இயக்குனர் கெளதம் மேனனும் தான் வாங்கிய அட்வான்ஸ்சம்பளமான ரூ. 1 கோடியை காஜாவிடம் திருப்பித் தர முடிவு செய்துள்ளார்.

    பிரச்சினைகளிலிருந்து காஜா வெளிவந்த பிறகு வேட்டையாடு விளையாடு படத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றுகமலும், கெளதம் முடிவு செய்துள்ளார்களாம்.

    நடிகர்களால் அழிந்தேன்:

    இதற்கிடையே, நடிகர்களால்தான் நான் இந்த நிலைக்கு ஆளானேன் என்று காஜா மைதீன் கூறியுள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை நெருங்கிய நண்பர்கள் சிலர் சந்தித்துப் பேசியபோது அவர்களிடம் காஜாகூறுகையில்,

    நன்றாகத்தான் இருந்தேன். வெற்றிப் படங்களைக் கொடுத்தபோது எதிரிகள் யார் என்று தெரியவில்லை. ஆனால் தோல்விப்படங்களைக் கொடுத்தபோதுதான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

    நடிகர்களால்தான் நான் இந்த நலைக்கு ஆளானேன். அவர்களால்தான் அழிந்தேன். நடிகர்களால் ரொம்பவே நான் சிரமப்பட்டுவிட்டேன். மனதில் உள்ளதை எல்லாம் உடல் நலம் சரியான பிறகு வெளிப்படையாக, பகிரங்கமாக சொல்லப் போகிறேன்என்று கூறியுள்ளாராம் காஜா.

    Aamni @ Ayeshaதனது பிரச்சினைகள் குறித்தும், யாரால் தான் பாதிக்கப்பட்டேன் என்பதையும் கடிதம் மூலம் தயாரிப்பாளர் சங்கத்த் தலைவர்தியாகராஜனிடம் திங்கள்கிழமை தெரிவிக்கவுள்ளார் காஜா.

    தயாரிப்பாளர்கள் ஆவேசம்:

    இதற்கிடையே, நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்கவும், தயாரிப்பாளர்களை நடிகர்களின் தொல்லைகளிலிருந்து மீட்டு,தற்கொலை போன்ற சம்பவங்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுப்பது என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கஅவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    காஜா மைதீன் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன்தலைமையில் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.

    இதில் ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர்களினால்தான் தயாரிப்பாளர்களுக்கு பலகஷ்டங்கள் ஏற்படுகின்றன. காஜா மைதீன் போல பல தயாரிப்பாளர்கள் நடிகர்களினால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.

    அவர்களது சம்பளத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள்தான் நடிகர்களின்சம்பளத்தை நிர்ணயிப்பார்கள். நடிகர்களும் தயாரிப்பாளர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டனர்.

    ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இப்போது காஜா மைதீனுக்கு ஏற்பட்ட நிலைமைக்கு நடிகர்கள்தான்காரணம். விஜயகாந்த்தின் பேரரசு படத்திற்காக அவர் பெரும் செலவுகளை செய்து வந்தார். இதற்காக ஏகப்பட்ட கடன்களைவாங்கியிருந்தார்.

    ஆனால் விஜயகாந்த் திடீரென அப்படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனது மச்சான் தயாரிக்கும் சொந்தப் படமான சுதேசியில்நடிக்கப் போய் விட்டார். (இத்தனைக்கும் ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து செய்பவர் விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது)

    Kamalஏற்கனவே அவருக்கு நிறைய சம்பளம் கொடுத்து சிரமப்பட்டு வந்த காஜா மைதீன் படம் பாதியில் நின்றதால் மனம் உடைந்தார்.அத்தோடு கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்திற்கும் பூஜை போட்டு விட்டார்.

    கடன் தொல்லை அதிகமானதால் வேட்டையாடு விளையாடு படத்தை மேற்கொண்டு தொடர முடியாமல் சிரமப்பட்டார். இப்படிபல வகைகளில் அவருக்கு நெருக்கடி அதிகமானதால்தான் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதுபோன்ற நிலைமை இனியும் கோடம்பாக்கத்தில் இருக்கக் கூடாது. எனவே நடிகர்களுக்கு கடிவாளம் போட்டே ஆகவேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் ஆவேசமாக பேசியுள்ளனர்.

    ஜீ.வி. தற்கொலையின்போதே நாம் உஷாராயிருக்க வேண்டும். ஆனால் அலட்சியமாக விட்டு விட்டோம். இப்போதுகாஜாமைதீன் முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவரைக் காப்பாற்றி விட்டோம். நாளையே இன்னும் பலர் இப்படிதற்கொலைக்கு முயன்றால் சினிமா உலகம் என்ன ஆவது? என்றும் பலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

    பின்னர் கூட்டத்தில் பேசிய சங்கத் தலைவர் தியாகராஜன், காஜா மைதீன் முதலில் குணமாகட்டும். அதன் பிறகு அவரைசங்கத்திற்கு நேரில் வரவழைத்து என்ன பிரச்சின்ை என்று கேட்போம். அதன் பிறகு திரையுலகம் சம்பந்தமான பிரச்சினையாகஇருந்தால் அனைவரும் கூடி உறுதியாக விசாரித்து என்ன முடிவு எடுத்தால் சரியாக இருக்குமோ அந்த முடிவை தயங்காமல்எடுப்போம் என்றார்.

    தயாரிப்பாளர்கள்- நடிகர்கள் மோதலுக்கு கோடம்பாக்கம் தயாராகவே தெரிகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X