கன்னட படத்தில் கமல் சதி லீலாவதி படம் இப்போது கன்னடத்தில் தயாராகி வருகிறது.சதி லீலாவதியில் கமலுடன் நடித்த ரமேஷ் அர்விந்த் இப்போது கன்னடத்தில் இப் படத்தை இயக்குகிறார். இவர் டைரக்ட்செய்யும் முதல் படம் இது. படத்துக்கு ராமா ஷியாமா பாமா என்று பெயரிட்டுள்ளார்கள்.இதில் கமல், ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர். இதன் சூட்டிங்குக்காக பெங்களூர் வந்த கமல் நிருபர்களிடம் பேசுகையில்,மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கில் படங்களின் தரம் வர, வர குறைந்து கொண்டே வருகிறது. நல்ல படங்களைஆதரிக்க வேண்டிய கடமை ரசிகர்களுக்கும படம் பார்ப்பவர்களுக்கும் உண்டு. சினிமாத்துறைக்கு வேகம் போதாது. இன்னும்வீரியம் தேவை. சினிமாவில் பரீட்சார்த்த விஷயங்கள் குறைந்து போய்விட்டன. ஆர் அண்ட் டிக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.நான் பெங்களூர் வரும்போதெல்லாம் அது என்னை என் பழைய நினைவுகளில் தள்ளிவிடுவது வழக்கம். கோகிலா, சுவாதிமுத்யம் போன்ற படங்கள் இங்கு தான் எடுக்கப்பட்டன.ரமேசும் நானும் கே.பாலசந்தரின் சிஷ்யர்கள். அவர் இயக்கும் முதல் படத்தில் நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றகமலிடம் ரஜினி குறித்து நிருபர்கள் கேட்டபோது, ரஜினி எங்கள் தமிழகத்துக்கு கர்நாடகம் தந்த பரிசு என்றார்.ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், அது உலக சினிமாவுக்கான விருதே அல்ல. அதுஅமெரிக்கர்களுக்காக அவர்கள் தந்து கொள்ளும் விருது தான் என்றார் கமல்.தமிழில் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தவாரே கன்னடத்தில் நடிக்கப் போகும் கமல், அடுத்து ஒரு தெலுங்குபடத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இது தொடர்பாக கமலுடன் தெலுங்கு தயாரிப்பாளரான ராமா நாயுடு பேசிக்கொண்டிருக்கிறாராம்.12வயதில் பூணூல் மறுத்தவன் நான்:முன்னதாக நேற்று சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்தது. அதில் கமல்பேசியதாவது:மதக் கலவரம் வராமல் இருக்க ரகசியமாய் ஒரு அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் பல நல்ல மனிதர்கள்,பெரிய மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதில் நானும் இருக்கிறேன்.நான் நல்ல சூழலில் வளர்ந்தேன். எங்கள் வீடு முழுக்க வக்கீல்களாக வலம் வந்தபோது நான் மட்டும் வக்கீலாகவில்லை.படிப்புக்கும் பரிட்சைக்கும் பயந்து தான் நான் சினிமாவுக்கே வந்தேன். பாலசந்தர், பரிட்சை எழுது.. சான்ஸ் தருகிறேன் என்றுசொல்லியிருந்தால் எனக்கு சினிமா சான்ஸ் கிடைத்திருக்காது.சினிமா ரொம்ப அத்யாவசியமான சர்வீஸ் என்று சொல்வதை நான் ஏற்க மாட்டேன். சினிமாவும் கோகோ கோலா மாதிரி தான்.அத்வாயவசியமான தேவையெல்லாம் அல்ல என்றார் கமல்.பின்னர் அவரிடம் கூட்டத்தில் இருந்த பொது மக்கள் கலந்துரையாட வாய்ப்பு தரப்பட்டது. அப்போது கேட்கப்பட்டகேள்விகளுக்கு கமலின் பதில்கள்.கேள்வி: உங்களிடம் பாலசந்தரின் பாதிப்பு இருக்கிறதா?கமல்: பாலசந்தர், அனந்து ஆகியோரின் பாதிப்பு என்னிடம் உண்டு. பாலசந்தரிடம் போர்ப் பயிற்சி பெற்றவன் நான். எனக்குவேகத் தடை வேண்டும் என்று ஒரு முறை பாலசந்தர் சொன்னார். நான் வேகம் கற்றதே அவரிடம் தானே.கேள்வி: கடவுள் பற்றி உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் வைத்திருக்கிறீர்கள்?கமல்: எல்லோரது அகராதியிலும் இருப்பது தான் என் அகராதியிலும் இருக்கிறது. 12 வயது வரை எல்லா கோவில்களுக்கும்போய் சாமி கும்பிட்டவன் தான் நான். ஸ்தல புராண பாடல்கள் பாடியவன். பூஜை அறையில் தினம் அரை மணி நேரம் மந்திரஉச்சாடனம் சொன்னவன். என் 12 வயதில் மாபெரும் புரட்சி செய்தவர் என் தந்தை சீனிவாசன்.அவரிடம் எனக்கு பூணூல் வேண்டாம் என்றேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார். சில மனிதர்களுக்கு கடவுள்தேவைப்படுவதைப் போல சிலருக்கு தேவைப்படுவதில்லை.கேள்வி: திருவள்ளுவராக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?கமல்: திருவள்ளுவர் ஒரு சிக்கலான வரலாறு. அவர் கிருஸ்துவரா? ஜைன மதத்தைச் சேர்ந்தவரா என்ற கேள்விகள் எல்லாம் கூடஉண்டு. அவரை எப்படி சித்தரிப்பது என்பதில் குழப்பங்கள் உள்ளன.கேள்வி: மருதநாயகம்...?பதில்: உங்களைவிட அந்தப் படத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அந்தப் படம் ஆரம்பித்த வேகத்தில் வளர்ந்திருந்தால் உலகஅரங்கில் ஒரு தமிழ்ப் படம் அரங்கேற்றம் கண்டிருக்கும்.கேள்வி: இப்போது என்ன வகையான சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?பதில்: இந்தியாவில் 1 கோடி பேருக்கு எய்ட்ஸ் உள்ளது. இந்த நோய்க் கட்டுப்பாடு, விழிப்புணர்வு பரப்புவது குறித்து ஆங்கிலநடிகர் ரிச்சர்ட் கெரே என்னுடன் பேசினார். எங்கள் நற்பணி மன்றத்தின் சேவையைப் பாராட்டிவிட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுபிரச்சாரத்துக்கும் உதவுமாறு கேட்டுக் கொண்டார்.எதிர்காலத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய புதிய பொறுப்பில் நான் சம்பந்தப்பட்டிருப்பேன் என்றார் கமல்.

By Staff

சதி லீலாவதி படம் இப்போது கன்னடத்தில் தயாராகி வருகிறது.

சதி லீலாவதியில் கமலுடன் நடித்த ரமேஷ் அர்விந்த் இப்போது கன்னடத்தில் இப் படத்தை இயக்குகிறார். இவர் டைரக்ட்செய்யும் முதல் படம் இது. படத்துக்கு ராமா ஷியாமா பாமா என்று பெயரிட்டுள்ளார்கள்.

இதில் கமல், ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர். இதன் சூட்டிங்குக்காக பெங்களூர் வந்த கமல் நிருபர்களிடம் பேசுகையில்,

மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கில் படங்களின் தரம் வர, வர குறைந்து கொண்டே வருகிறது. நல்ல படங்களைஆதரிக்க வேண்டிய கடமை ரசிகர்களுக்கும படம் பார்ப்பவர்களுக்கும் உண்டு. சினிமாத்துறைக்கு வேகம் போதாது. இன்னும்வீரியம் தேவை. சினிமாவில் பரீட்சார்த்த விஷயங்கள் குறைந்து போய்விட்டன. ஆர் அண்ட் டிக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

நான் பெங்களூர் வரும்போதெல்லாம் அது என்னை என் பழைய நினைவுகளில் தள்ளிவிடுவது வழக்கம். கோகிலா, சுவாதிமுத்யம் போன்ற படங்கள் இங்கு தான் எடுக்கப்பட்டன.

ரமேசும் நானும் கே.பாலசந்தரின் சிஷ்யர்கள். அவர் இயக்கும் முதல் படத்தில் நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றகமலிடம் ரஜினி குறித்து நிருபர்கள் கேட்டபோது, ரஜினி எங்கள் தமிழகத்துக்கு கர்நாடகம் தந்த பரிசு என்றார்.

ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், அது உலக சினிமாவுக்கான விருதே அல்ல. அதுஅமெரிக்கர்களுக்காக அவர்கள் தந்து கொள்ளும் விருது தான் என்றார் கமல்.

தமிழில் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தவாரே கன்னடத்தில் நடிக்கப் போகும் கமல், அடுத்து ஒரு தெலுங்குபடத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இது தொடர்பாக கமலுடன் தெலுங்கு தயாரிப்பாளரான ராமா நாயுடு பேசிக்கொண்டிருக்கிறாராம்.

12வயதில் பூணூல் மறுத்தவன் நான்:

முன்னதாக நேற்று சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்தது. அதில் கமல்பேசியதாவது:

மதக் கலவரம் வராமல் இருக்க ரகசியமாய் ஒரு அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் பல நல்ல மனிதர்கள்,பெரிய மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதில் நானும் இருக்கிறேன்.

நான் நல்ல சூழலில் வளர்ந்தேன். எங்கள் வீடு முழுக்க வக்கீல்களாக வலம் வந்தபோது நான் மட்டும் வக்கீலாகவில்லை.படிப்புக்கும் பரிட்சைக்கும் பயந்து தான் நான் சினிமாவுக்கே வந்தேன். பாலசந்தர், பரிட்சை எழுது.. சான்ஸ் தருகிறேன் என்றுசொல்லியிருந்தால் எனக்கு சினிமா சான்ஸ் கிடைத்திருக்காது.

சினிமா ரொம்ப அத்யாவசியமான சர்வீஸ் என்று சொல்வதை நான் ஏற்க மாட்டேன். சினிமாவும் கோகோ கோலா மாதிரி தான்.அத்வாயவசியமான தேவையெல்லாம் அல்ல என்றார் கமல்.

பின்னர் அவரிடம் கூட்டத்தில் இருந்த பொது மக்கள் கலந்துரையாட வாய்ப்பு தரப்பட்டது. அப்போது கேட்கப்பட்டகேள்விகளுக்கு கமலின் பதில்கள்.

கேள்வி: உங்களிடம் பாலசந்தரின் பாதிப்பு இருக்கிறதா?

கமல்: பாலசந்தர், அனந்து ஆகியோரின் பாதிப்பு என்னிடம் உண்டு. பாலசந்தரிடம் போர்ப் பயிற்சி பெற்றவன் நான். எனக்குவேகத் தடை வேண்டும் என்று ஒரு முறை பாலசந்தர் சொன்னார். நான் வேகம் கற்றதே அவரிடம் தானே.

கேள்வி: கடவுள் பற்றி உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் வைத்திருக்கிறீர்கள்?

கமல்: எல்லோரது அகராதியிலும் இருப்பது தான் என் அகராதியிலும் இருக்கிறது. 12 வயது வரை எல்லா கோவில்களுக்கும்போய் சாமி கும்பிட்டவன் தான் நான். ஸ்தல புராண பாடல்கள் பாடியவன். பூஜை அறையில் தினம் அரை மணி நேரம் மந்திரஉச்சாடனம் சொன்னவன். என் 12 வயதில் மாபெரும் புரட்சி செய்தவர் என் தந்தை சீனிவாசன்.

அவரிடம் எனக்கு பூணூல் வேண்டாம் என்றேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார். சில மனிதர்களுக்கு கடவுள்தேவைப்படுவதைப் போல சிலருக்கு தேவைப்படுவதில்லை.

கேள்வி: திருவள்ளுவராக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?

கமல்: திருவள்ளுவர் ஒரு சிக்கலான வரலாறு. அவர் கிருஸ்துவரா? ஜைன மதத்தைச் சேர்ந்தவரா என்ற கேள்விகள் எல்லாம் கூடஉண்டு. அவரை எப்படி சித்தரிப்பது என்பதில் குழப்பங்கள் உள்ளன.

கேள்வி: மருதநாயகம்...?

பதில்: உங்களைவிட அந்தப் படத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அந்தப் படம் ஆரம்பித்த வேகத்தில் வளர்ந்திருந்தால் உலகஅரங்கில் ஒரு தமிழ்ப் படம் அரங்கேற்றம் கண்டிருக்கும்.

கேள்வி: இப்போது என்ன வகையான சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?

பதில்: இந்தியாவில் 1 கோடி பேருக்கு எய்ட்ஸ் உள்ளது. இந்த நோய்க் கட்டுப்பாடு, விழிப்புணர்வு பரப்புவது குறித்து ஆங்கிலநடிகர் ரிச்சர்ட் கெரே என்னுடன் பேசினார். எங்கள் நற்பணி மன்றத்தின் சேவையைப் பாராட்டிவிட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுபிரச்சாரத்துக்கும் உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

எதிர்காலத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய புதிய பொறுப்பில் நான் சம்பந்தப்பட்டிருப்பேன் என்றார் கமல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X