»   »  கமல் தொடங்கும் நடிப்புக் கல்லூரி! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் ஊட்டி அல்லது கொடைக்கானலில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டங்உள்ளிட்டவற்றை போதிக்கும் திரைப்படக் கல்லூரியைத் தொடங்க கலைஞானி கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.நடிப்புலக இமயமாக விளங்கிய சிவாஜி கணேசனின் நினைவாக சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டபம் கட்டதென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நிலம் ஒதுக்கக் கோரி தமிழக அரசையும் நடிகர் சங்கம் அணுகியது. பலகால இழுபறிக்குப் பின்னர் தமிழக அரசு நிலத்தை ஒருவழியாக ஒதுக்கித் தந்தது.ஆனால் மணிமண்டபம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சில வதந்திகள் உலா வரத்தொடங்கின. சிவாஜி கணேசன், என்னதான் நடிப்புலகில் யாரும் எட்ட முடியாத சிகரத்தைத் தொட்டவர் என்றாலும் அரசியலில்அவர் அதல பாதாளத்தைப் பார்த்தவர். இது நடிகர் சங்கத் தலைவராக இருந்து தற்போது அரசியல் தலைவராக மாறியிருக்கும் விஜயகாந்த் தரப்பினருக்கு ஒரு விதமானநெருடலை ஏற்படுத்தியுள்ளதாம்.சிவாஜி கணேசன் தொடர்பான பணிகளில் இப்போது ஈடுபட்டால், அவரது அரசியல் ராசி நம்மையும் பற்றிக் கொள்ளலாம் எனபயந்த சிலர், இப்போதைக்கு சிவாஜி கணேசன் மணிமண்டபம் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்ட வேண்டாம் எனகேப்டனுக்கு அறிவுரை வழங்கினார்களாம்.கூட்டிக் கழித்துப் பார்த்த கேப்டன், அதுவும் சரிதான் என்று சற்றே நிதானப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறாராம். ஆனாலும்,பல்வேறு முனைகளிலிருந்தும் நெருக்கடி வந்த காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு அவசர, அவசரமாக பூமி பஜை போட்டனர். அத்தோடு சரி, மணி மண்டபம் குறித்த எந்தத் தகவலையும் காணோம்.இந் நிலையில் சிவாஜியின் கலை வாரிசாக அறியப்படும் கமல்ஹாசன் சப்தம் போடாமல் ஒரு காரியத்தை செய்து வருகிறார்.ஊட்டி அல்லது கொடைக்கானலில் சிவாஜி கணேசன் பெயரில் நடிப்புக் கல்லூரியைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.இதற்காக இரு இடங்களிலும் தோதான இடத்தைப் பார்த்து வருகிறார். பல கோடிகள் முதலீட்டில் இந்தக் கல்லூரி உருவாகப்போகிறதாம்.இந்தக் கல்லூரியில், நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட திரைத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் கற்பிக்கப்போகிறார்கள்.கல்லூரியை தனது சொந்த செலவிலேயே நிறுவ கமல் டிவு செய்துள்ளார். இருப்பினும் பிறருடைய உதவி கிடைத்தால் அதையும்ஏற்க கமல் ரெடி என்கிறார்கள். ஆனால், உதவி கேட்டு யாரிடமும் போய் நிற்க மாட்டாராம்.

கமல் தொடங்கும் நடிப்புக் கல்லூரி! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் ஊட்டி அல்லது கொடைக்கானலில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டங்உள்ளிட்டவற்றை போதிக்கும் திரைப்படக் கல்லூரியைத் தொடங்க கலைஞானி கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.நடிப்புலக இமயமாக விளங்கிய சிவாஜி கணேசனின் நினைவாக சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டபம் கட்டதென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நிலம் ஒதுக்கக் கோரி தமிழக அரசையும் நடிகர் சங்கம் அணுகியது. பலகால இழுபறிக்குப் பின்னர் தமிழக அரசு நிலத்தை ஒருவழியாக ஒதுக்கித் தந்தது.ஆனால் மணிமண்டபம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சில வதந்திகள் உலா வரத்தொடங்கின. சிவாஜி கணேசன், என்னதான் நடிப்புலகில் யாரும் எட்ட முடியாத சிகரத்தைத் தொட்டவர் என்றாலும் அரசியலில்அவர் அதல பாதாளத்தைப் பார்த்தவர். இது நடிகர் சங்கத் தலைவராக இருந்து தற்போது அரசியல் தலைவராக மாறியிருக்கும் விஜயகாந்த் தரப்பினருக்கு ஒரு விதமானநெருடலை ஏற்படுத்தியுள்ளதாம்.சிவாஜி கணேசன் தொடர்பான பணிகளில் இப்போது ஈடுபட்டால், அவரது அரசியல் ராசி நம்மையும் பற்றிக் கொள்ளலாம் எனபயந்த சிலர், இப்போதைக்கு சிவாஜி கணேசன் மணிமண்டபம் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்ட வேண்டாம் எனகேப்டனுக்கு அறிவுரை வழங்கினார்களாம்.கூட்டிக் கழித்துப் பார்த்த கேப்டன், அதுவும் சரிதான் என்று சற்றே நிதானப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறாராம். ஆனாலும்,பல்வேறு முனைகளிலிருந்தும் நெருக்கடி வந்த காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு அவசர, அவசரமாக பூமி பஜை போட்டனர். அத்தோடு சரி, மணி மண்டபம் குறித்த எந்தத் தகவலையும் காணோம்.இந் நிலையில் சிவாஜியின் கலை வாரிசாக அறியப்படும் கமல்ஹாசன் சப்தம் போடாமல் ஒரு காரியத்தை செய்து வருகிறார்.ஊட்டி அல்லது கொடைக்கானலில் சிவாஜி கணேசன் பெயரில் நடிப்புக் கல்லூரியைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.இதற்காக இரு இடங்களிலும் தோதான இடத்தைப் பார்த்து வருகிறார். பல கோடிகள் முதலீட்டில் இந்தக் கல்லூரி உருவாகப்போகிறதாம்.இந்தக் கல்லூரியில், நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட திரைத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் கற்பிக்கப்போகிறார்கள்.கல்லூரியை தனது சொந்த செலவிலேயே நிறுவ கமல் டிவு செய்துள்ளார். இருப்பினும் பிறருடைய உதவி கிடைத்தால் அதையும்ஏற்க கமல் ரெடி என்கிறார்கள். ஆனால், உதவி கேட்டு யாரிடமும் போய் நிற்க மாட்டாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் ஊட்டி அல்லது கொடைக்கானலில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டங்உள்ளிட்டவற்றை போதிக்கும் திரைப்படக் கல்லூரியைத் தொடங்க கலைஞானி கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

நடிப்புலக இமயமாக விளங்கிய சிவாஜி கணேசனின் நினைவாக சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டபம் கட்டதென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நிலம் ஒதுக்கக் கோரி தமிழக அரசையும் நடிகர் சங்கம் அணுகியது. பலகால இழுபறிக்குப் பின்னர் தமிழக அரசு நிலத்தை ஒருவழியாக ஒதுக்கித் தந்தது.

ஆனால் மணிமண்டபம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சில வதந்திகள் உலா வரத்தொடங்கின. சிவாஜி கணேசன், என்னதான் நடிப்புலகில் யாரும் எட்ட முடியாத சிகரத்தைத் தொட்டவர் என்றாலும் அரசியலில்அவர் அதல பாதாளத்தைப் பார்த்தவர்.


இது நடிகர் சங்கத் தலைவராக இருந்து தற்போது அரசியல் தலைவராக மாறியிருக்கும் விஜயகாந்த் தரப்பினருக்கு ஒரு விதமானநெருடலை ஏற்படுத்தியுள்ளதாம்.

சிவாஜி கணேசன் தொடர்பான பணிகளில் இப்போது ஈடுபட்டால், அவரது அரசியல் ராசி நம்மையும் பற்றிக் கொள்ளலாம் எனபயந்த சிலர், இப்போதைக்கு சிவாஜி கணேசன் மணிமண்டபம் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்ட வேண்டாம் எனகேப்டனுக்கு அறிவுரை வழங்கினார்களாம்.

கூட்டிக் கழித்துப் பார்த்த கேப்டன், அதுவும் சரிதான் என்று சற்றே நிதானப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறாராம். ஆனாலும்,பல்வேறு முனைகளிலிருந்தும் நெருக்கடி வந்த காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு அவசர, அவசரமாக பூமி பஜை போட்டனர்.


அத்தோடு சரி, மணி மண்டபம் குறித்த எந்தத் தகவலையும் காணோம்.

இந் நிலையில் சிவாஜியின் கலை வாரிசாக அறியப்படும் கமல்ஹாசன் சப்தம் போடாமல் ஒரு காரியத்தை செய்து வருகிறார்.ஊட்டி அல்லது கொடைக்கானலில் சிவாஜி கணேசன் பெயரில் நடிப்புக் கல்லூரியைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக இரு இடங்களிலும் தோதான இடத்தைப் பார்த்து வருகிறார். பல கோடிகள் முதலீட்டில் இந்தக் கல்லூரி உருவாகப்போகிறதாம்.

இந்தக் கல்லூரியில், நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட திரைத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் கற்பிக்கப்போகிறார்கள்.

கல்லூரியை தனது சொந்த செலவிலேயே நிறுவ கமல் டிவு செய்துள்ளார். இருப்பினும் பிறருடைய உதவி கிடைத்தால் அதையும்ஏற்க கமல் ரெடி என்கிறார்கள். ஆனால், உதவி கேட்டு யாரிடமும் போய் நிற்க மாட்டாராம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil