»   »  கமலிடம் போன எஸ்.ஜே. சூர்யா! தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும், வித்தியாசமான நடிகராகவும் வலம் வந்து கொண்டுள்ள எஸ்.ஜே.சூர்யாவைப் பற்றிய ஒரு ரகசியத் தகவலை கமல்ஹாசன் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.எஸ்.ஜே. சூர்யா, நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள கள்வனின் காதலி படத்தின் பாடல் கேசட் வெளியீடு சென்னையில்நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.வேட்டையாடு விளையாடு படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னைதிரும்பினார். இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கேட்டுக் கொண்டதற்கிணங்ககமல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பல விஷயங்களைத் தொட்டார். வழக்கம் போல கமல் டச் தூக்கலாகவே இருந்தது. அவரது பேச்சில்ஒரு சுவாரஸ்யமான விஷயம் வெளி வந்தது.கமல் பேசுகையில், சில வருடங்களுக்கு முன் எஸ்.ஜே. சூர்யா என்னை வந்து சந்தித்தார். அது, மருதநாயகம் படம் குறித்தஅறிவிப்பை நான் வெளியிட்ட நேரம். என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்ற விரும்புவதாக சூர்யா என்னிடம்விண்ணப்பித்தார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு கூறி அப்போது அவரை அணுப்பி விட்டேன்.ஆனால் ஆறு மாதங்கள் கழித்து அவர் என்னிடம் வரவில்லை. மாறாக அவரே ஒரு இயக்குனராக உருவாகி விட்டிருந்தார்.இப்போது நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். சந்தோஷமான விஷயம் இது. ஒரு வேளை சூர்யா என்னிடம் பணியாற்றிருந்தால், எனக்கு ஒரு நல்ல உதவி இயக்குனர் கிடைத்திருப்பார். நான் தவறவிட்டுவிட்டேன் என்றார் கமல்.பின்னர் எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், ஒரு நடிகராக இருப்பது சோகமான விஷயம். எனக்குத் தயாரிப்பும், இயக்கமும்தான்பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் என்பவர் தந்தை மாதிரி. இயக்குனர் என்பவர் ஒரு தாய் மாதிரி. நடிகன் என்பவன் குழந்தைமாதிரி.கள்வனின் காதலி படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்த காரணத்தால்தான் நான் நடிக்க ஒத்துக் கொண்டேன். மற்றபடி படத்தயாரிப்பும், இயக்கமும் தான் எனது முதல் காதல் என்றார். கமலிடம் போகாமல் பலரிடமும் அஸிஸ்டெண்டாகப் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யாவின் திறமையை முதலில்கண்டுபிடித்தவர் அஜீத் தான். அவர் தான் சூர்யாவுக்கு இயக்க வாய்ப்பு வாங்கித் தந்ததோடு, நடிக்கவும் முன் வந்தார்.அந்தப் படம் தான் வாலி. அதன் மூலம் சூர்யா மட்டுமல்ல, அஜீத்துக்கும் சிம்ரனுக்கும் மிகப் பெரிய பிரேக் கிடைத்தது.அன்று முதல் எஸ்.ஜே. சூர்யா தனது வீட்டில் சாமி படத்துக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் படம் யாருடையது தெரியுமா?அஜீத்துடையது. நன்றி மறப்பதே வாடிக்கையாக இருக்கும் சினிமா உலகில் தனக்கு கை கொடுத்த அஜீத்தை இன்னும் மறக்காமல்இருப்பது, சூர்யாவின் பெரிய மனசு.

கமலிடம் போன எஸ்.ஜே. சூர்யா! தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும், வித்தியாசமான நடிகராகவும் வலம் வந்து கொண்டுள்ள எஸ்.ஜே.சூர்யாவைப் பற்றிய ஒரு ரகசியத் தகவலை கமல்ஹாசன் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.எஸ்.ஜே. சூர்யா, நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள கள்வனின் காதலி படத்தின் பாடல் கேசட் வெளியீடு சென்னையில்நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.வேட்டையாடு விளையாடு படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னைதிரும்பினார். இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கேட்டுக் கொண்டதற்கிணங்ககமல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பல விஷயங்களைத் தொட்டார். வழக்கம் போல கமல் டச் தூக்கலாகவே இருந்தது. அவரது பேச்சில்ஒரு சுவாரஸ்யமான விஷயம் வெளி வந்தது.கமல் பேசுகையில், சில வருடங்களுக்கு முன் எஸ்.ஜே. சூர்யா என்னை வந்து சந்தித்தார். அது, மருதநாயகம் படம் குறித்தஅறிவிப்பை நான் வெளியிட்ட நேரம். என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்ற விரும்புவதாக சூர்யா என்னிடம்விண்ணப்பித்தார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு கூறி அப்போது அவரை அணுப்பி விட்டேன்.ஆனால் ஆறு மாதங்கள் கழித்து அவர் என்னிடம் வரவில்லை. மாறாக அவரே ஒரு இயக்குனராக உருவாகி விட்டிருந்தார்.இப்போது நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். சந்தோஷமான விஷயம் இது. ஒரு வேளை சூர்யா என்னிடம் பணியாற்றிருந்தால், எனக்கு ஒரு நல்ல உதவி இயக்குனர் கிடைத்திருப்பார். நான் தவறவிட்டுவிட்டேன் என்றார் கமல்.பின்னர் எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், ஒரு நடிகராக இருப்பது சோகமான விஷயம். எனக்குத் தயாரிப்பும், இயக்கமும்தான்பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் என்பவர் தந்தை மாதிரி. இயக்குனர் என்பவர் ஒரு தாய் மாதிரி. நடிகன் என்பவன் குழந்தைமாதிரி.கள்வனின் காதலி படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்த காரணத்தால்தான் நான் நடிக்க ஒத்துக் கொண்டேன். மற்றபடி படத்தயாரிப்பும், இயக்கமும் தான் எனது முதல் காதல் என்றார். கமலிடம் போகாமல் பலரிடமும் அஸிஸ்டெண்டாகப் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யாவின் திறமையை முதலில்கண்டுபிடித்தவர் அஜீத் தான். அவர் தான் சூர்யாவுக்கு இயக்க வாய்ப்பு வாங்கித் தந்ததோடு, நடிக்கவும் முன் வந்தார்.அந்தப் படம் தான் வாலி. அதன் மூலம் சூர்யா மட்டுமல்ல, அஜீத்துக்கும் சிம்ரனுக்கும் மிகப் பெரிய பிரேக் கிடைத்தது.அன்று முதல் எஸ்.ஜே. சூர்யா தனது வீட்டில் சாமி படத்துக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் படம் யாருடையது தெரியுமா?அஜீத்துடையது. நன்றி மறப்பதே வாடிக்கையாக இருக்கும் சினிமா உலகில் தனக்கு கை கொடுத்த அஜீத்தை இன்னும் மறக்காமல்இருப்பது, சூர்யாவின் பெரிய மனசு.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும், வித்தியாசமான நடிகராகவும் வலம் வந்து கொண்டுள்ள எஸ்.ஜே.சூர்யாவைப் பற்றிய ஒரு ரகசியத் தகவலை கமல்ஹாசன் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா, நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள கள்வனின் காதலி படத்தின் பாடல் கேசட் வெளியீடு சென்னையில்நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

வேட்டையாடு விளையாடு படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னைதிரும்பினார். இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கேட்டுக் கொண்டதற்கிணங்ககமல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.


நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பல விஷயங்களைத் தொட்டார். வழக்கம் போல கமல் டச் தூக்கலாகவே இருந்தது. அவரது பேச்சில்ஒரு சுவாரஸ்யமான விஷயம் வெளி வந்தது.

கமல் பேசுகையில், சில வருடங்களுக்கு முன் எஸ்.ஜே. சூர்யா என்னை வந்து சந்தித்தார். அது, மருதநாயகம் படம் குறித்தஅறிவிப்பை நான் வெளியிட்ட நேரம். என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்ற விரும்புவதாக சூர்யா என்னிடம்விண்ணப்பித்தார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு கூறி அப்போது அவரை அணுப்பி விட்டேன்.

ஆனால் ஆறு மாதங்கள் கழித்து அவர் என்னிடம் வரவில்லை. மாறாக அவரே ஒரு இயக்குனராக உருவாகி விட்டிருந்தார்.இப்போது நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். சந்தோஷமான விஷயம் இது.


ஒரு வேளை சூர்யா என்னிடம் பணியாற்றிருந்தால், எனக்கு ஒரு நல்ல உதவி இயக்குனர் கிடைத்திருப்பார். நான் தவறவிட்டுவிட்டேன் என்றார் கமல்.

பின்னர் எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், ஒரு நடிகராக இருப்பது சோகமான விஷயம். எனக்குத் தயாரிப்பும், இயக்கமும்தான்பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் என்பவர் தந்தை மாதிரி. இயக்குனர் என்பவர் ஒரு தாய் மாதிரி. நடிகன் என்பவன் குழந்தைமாதிரி.

கள்வனின் காதலி படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்த காரணத்தால்தான் நான் நடிக்க ஒத்துக் கொண்டேன். மற்றபடி படத்தயாரிப்பும், இயக்கமும் தான் எனது முதல் காதல் என்றார்.


கமலிடம் போகாமல் பலரிடமும் அஸிஸ்டெண்டாகப் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யாவின் திறமையை முதலில்கண்டுபிடித்தவர் அஜீத் தான். அவர் தான் சூர்யாவுக்கு இயக்க வாய்ப்பு வாங்கித் தந்ததோடு, நடிக்கவும் முன் வந்தார்.

அந்தப் படம் தான் வாலி. அதன் மூலம் சூர்யா மட்டுமல்ல, அஜீத்துக்கும் சிம்ரனுக்கும் மிகப் பெரிய பிரேக் கிடைத்தது.

அன்று முதல் எஸ்.ஜே. சூர்யா தனது வீட்டில் சாமி படத்துக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் படம் யாருடையது தெரியுமா?

அஜீத்துடையது. நன்றி மறப்பதே வாடிக்கையாக இருக்கும் சினிமா உலகில் தனக்கு கை கொடுத்த அஜீத்தை இன்னும் மறக்காமல்இருப்பது, சூர்யாவின் பெரிய மனசு.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil