அமெரிக்காவில், வேட்டையாடு விளையாடு.. கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் சூட்டிங் அடுத்த வாரம் அமெரிக்காவில் தொடங்குகிறது.முதலில் இந்தப் படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டது தயாரிப்பாளர் காஜா மைதீன். ஆனால், சில படங்களில் தொடர்தோல்வியால் அவரும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தற்கொலைக்கு முயல, தனக்குக் கொடுக்கப்பட்ட அட்வான்ஸைத்திருப்பித் தந்துவிட்டார் கமல். அதே போல படத்தின் இயக்குனர் கெளதம் மேனனும் அட்வான்ஸைத் திருப்பித் தந்தனர்.அட்வான்ஸே வாங்காமல் படத்தில் நடிக்க கமல் தயாரானார். அதே போல காசு வாங்காமல் படத்தை இயக்கித் தர கெளதமும்தயார் ஆனார். ஆனால், படத் தயாரிப்புக்கு தன்னிடம் சல்லிக் காசு கூட இல்லை என காஜா மொய்தீன் கைவிரித்துவிட,இதென்னடா தலைவலியா போச்சு என்று வேறு ஒரு தயாரிப்பாளரைத் தேடினார் கமல். இதையறிந்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், படத்தை தானே தயாரிக்க முன் வந்தார். ஆனால், காஜா மைதீனும் அவரும் பேச்சுநடத்தியும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை.இதையடுத்து இந்தப் படத்தை அப்படியே விட்டுவிட்டு தான் அடுத்து நடிக்கத் திட்டமிட்டுள்ள தசாவதாரம் படத்துக்கு 10வேடங்கள் போடுவது தொடர்பாக தனது ஆஸ்தான மேக்கப் மேனைத் தேடி ஹாலிவுட்டுக்குப் போய்விட்டார் கமல்.அமெரிக்காவில் தனக்கான 10 கெட்-அப்கள் குறித்து விவாதித்துவிட்டு, மேக்கப்பும் போட்டுப் பார்த்து திருப்தியான கமல்,அங்கேயே வேட்டையாடு விளையாடு படத்துக்கு லொக்கேஷனும் பார்த்துவிட்டு சென்னை திரும்பினார். வந்த கையோடு செவன்த் சேனல் நிறுவனத்திடம் பேசி, வேட்டையாடு விளையாடு படத்தின் தயாரிப்பை அவர்களிடம்தந்துவிட்டாராம் கமல். படத்துக்கு இதுவரை காஜா மைதீன் செலவிட்ட பணத்தை அவருக்கு செட்டில் செய்துவிட்டதாம் செவன்த்சேனல்.இதையடுத்து படத்துக்கு மிகப் பெரிய பட்ஜெட் போட்டுவிட்டு முதல்கட்டமாக இயக்குனர் கெளதமையும் தனக்கு ஜோடியாகநடிக்கும் ஜோதிகாவையும் அமெரிக்காவுக்கு பேக் செய்துவிட்டார் கமல்.படத்தின் பிற யூனிட்டையும் அடுத்தடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த கமல் இந்த வார இறுதியில் அங்கே விரைகிறார்.படப்பிடிப்பு அடுத்த வாரமே தொடங்குகிறதாம்.

By Staff

கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் சூட்டிங் அடுத்த வாரம் அமெரிக்காவில் தொடங்குகிறது.

முதலில் இந்தப் படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டது தயாரிப்பாளர் காஜா மைதீன். ஆனால், சில படங்களில் தொடர்தோல்வியால் அவரும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தற்கொலைக்கு முயல, தனக்குக் கொடுக்கப்பட்ட அட்வான்ஸைத்திருப்பித் தந்துவிட்டார் கமல். அதே போல படத்தின் இயக்குனர் கெளதம் மேனனும் அட்வான்ஸைத் திருப்பித் தந்தனர்.

அட்வான்ஸே வாங்காமல் படத்தில் நடிக்க கமல் தயாரானார். அதே போல காசு வாங்காமல் படத்தை இயக்கித் தர கெளதமும்தயார் ஆனார். ஆனால், படத் தயாரிப்புக்கு தன்னிடம் சல்லிக் காசு கூட இல்லை என காஜா மொய்தீன் கைவிரித்துவிட,இதென்னடா தலைவலியா போச்சு என்று வேறு ஒரு தயாரிப்பாளரைத் தேடினார் கமல்.


இதையறிந்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், படத்தை தானே தயாரிக்க முன் வந்தார். ஆனால், காஜா மைதீனும் அவரும் பேச்சுநடத்தியும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை.

இதையடுத்து இந்தப் படத்தை அப்படியே விட்டுவிட்டு தான் அடுத்து நடிக்கத் திட்டமிட்டுள்ள தசாவதாரம் படத்துக்கு 10வேடங்கள் போடுவது தொடர்பாக தனது ஆஸ்தான மேக்கப் மேனைத் தேடி ஹாலிவுட்டுக்குப் போய்விட்டார் கமல்.

அமெரிக்காவில் தனக்கான 10 கெட்-அப்கள் குறித்து விவாதித்துவிட்டு, மேக்கப்பும் போட்டுப் பார்த்து திருப்தியான கமல்,அங்கேயே வேட்டையாடு விளையாடு படத்துக்கு லொக்கேஷனும் பார்த்துவிட்டு சென்னை திரும்பினார்.


வந்த கையோடு செவன்த் சேனல் நிறுவனத்திடம் பேசி, வேட்டையாடு விளையாடு படத்தின் தயாரிப்பை அவர்களிடம்தந்துவிட்டாராம் கமல். படத்துக்கு இதுவரை காஜா மைதீன் செலவிட்ட பணத்தை அவருக்கு செட்டில் செய்துவிட்டதாம் செவன்த்சேனல்.

இதையடுத்து படத்துக்கு மிகப் பெரிய பட்ஜெட் போட்டுவிட்டு முதல்கட்டமாக இயக்குனர் கெளதமையும் தனக்கு ஜோடியாகநடிக்கும் ஜோதிகாவையும் அமெரிக்காவுக்கு பேக் செய்துவிட்டார் கமல்.

படத்தின் பிற யூனிட்டையும் அடுத்தடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த கமல் இந்த வார இறுதியில் அங்கே விரைகிறார்.

படப்பிடிப்பு அடுத்த வாரமே தொடங்குகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X