For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வேட்டையாடு விளையாடு... அட்ரீனல் அட்டகாசம் வேட்டையாடு விளையாடு படம் இதுவரை இந்தியாவில் யாரும் எடுக்காத வகையில் படு த்ரில்லான ஆக்ஷன் படமாகஉருவாக்கியுள்ளதாம்.காக்க..காக்க.. மூலம் ரசிகர்களுக்கு மிக வித்தியாசமான ஒரு ஆக்ஷன் அதிரடியை அறிமுகப்படுத்திய கெளதம், சூர்யாவுடன்சென்னையில் ஒரு மழைக் காலத்தைத் தொடங்கி அப்படியே விட்டுவிட்டு ஆரம்பித்த அடுத்த ப்ராஜெக்ட் தான் வேட்டையாடுவிளையாடு.படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே நடந்து முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் கமல், ஜோதிகா, கெளதம்உள்ளிட்ட டீம் அமெரிக்காவிலேயே டேரா போட்டு படத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். படமெடுக்க காசில்லாமல் காஜா மைதீன் பாய் தூக்க மாத்திரை சாப்பிட்டு சொதப்ப, படத்தை அப்படியே செவன்த் சேனல்மாணிக்கம் நாராயணனுக்கு மாற்றிவிட்டார் கமல்.நாராயணன் சளைக்காமல் ஏகப்பட்ட கோடிகளை வாரி இறைக்க, பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம்கமலுக்கு இன்னொரு வெற்றி விழா என்கிறார்கள்.இந்தியாவில் அட்டூழியம் செய்துவிட்டுத் தப்பும் தீவிரவாதிகளைத் தேடி அமெரிக்காவுக்குப் பயணிக்கும் ஒரு சிபிஐஇன்டெலிஜென்ஸ் காப்-கம்-கமாண்டோவின் ஆக்ஷன் அட்டகாசம் தான் வேட்டையாடு விளையாடாம். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல்

  By Staff
  |

  வேட்டையாடு விளையாடு படம் இதுவரை இந்தியாவில் யாரும் எடுக்காத வகையில் படு த்ரில்லான ஆக்ஷன் படமாகஉருவாக்கியுள்ளதாம்.

  காக்க..காக்க.. மூலம் ரசிகர்களுக்கு மிக வித்தியாசமான ஒரு ஆக்ஷன் அதிரடியை அறிமுகப்படுத்திய கெளதம், சூர்யாவுடன்சென்னையில் ஒரு மழைக் காலத்தைத் தொடங்கி அப்படியே விட்டுவிட்டு ஆரம்பித்த அடுத்த ப்ராஜெக்ட் தான் வேட்டையாடுவிளையாடு.

  படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே நடந்து முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் கமல், ஜோதிகா, கெளதம்உள்ளிட்ட டீம் அமெரிக்காவிலேயே டேரா போட்டு படத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.


  படமெடுக்க காசில்லாமல் காஜா மைதீன் பாய் தூக்க மாத்திரை சாப்பிட்டு சொதப்ப, படத்தை அப்படியே செவன்த் சேனல்மாணிக்கம் நாராயணனுக்கு மாற்றிவிட்டார் கமல்.

  நாராயணன் சளைக்காமல் ஏகப்பட்ட கோடிகளை வாரி இறைக்க, பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம்கமலுக்கு இன்னொரு வெற்றி விழா என்கிறார்கள்.

  இந்தியாவில் அட்டூழியம் செய்துவிட்டுத் தப்பும் தீவிரவாதிகளைத் தேடி அமெரிக்காவுக்குப் பயணிக்கும் ஒரு சிபிஐஇன்டெலிஜென்ஸ் காப்-கம்-கமாண்டோவின் ஆக்ஷன் அட்டகாசம் தான் வேட்டையாடு விளையாடாம்.


  ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல்
  காக்க..காக்க..வைவிட பல மடங்கு அதிகமாக அட்ரீனலினைப் பீச்சியடிக்கும் வேகமாம் கதையில், கேமராவும் கமலும் போட்டிபோட்டுக் கொண்டு விளையாடித் தீர்த்ததை சூப்பர் 35 எம்எம் பிரேமில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் கெளதமின்கேமராமேன் ரவி வர்மா.

  சினிமாஸ்கோப்பை மிகவும் பிரமாண்டமாய்க் காட்டும் சூப்பர் 35 எம்எம்மில் உருவாகியிருக்கும் முதல் தமிழ்ப் படம் இது தான்.டைட்டானிக் திரைப்படம் இந்தத் தொழில்நுட்பத்தில் தான் உருவானது.

  நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் ஹெலிகாப்டர் சேஸ், கார் சேஸ், சண்டைக் காட்சிகளை எடுத்துள்ளார்கள். பல ஹாலிவுட்நடிகர்களும் பங்கேற்க ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் சீன்களை சுட்டுள்ளார்களாம்.


  பெரும்பாலான காட்சிகள் முடிவந்துவிட்ட நிலையில் இறுதிக் கட்டமாக சில காட்சிகளை இப்போது சென்னையில் செட் போட்டுஎடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமாம்.

  இதுவரை எடுத்த படத்தை வினியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டி விலை பேசினார்களாம். படத்தைப் பார்த்து மிரண்டுபோன வினியோகஸ்தர்கள் எவ்வளவு விலையும் தர பெரும் போட்டியில் இறங்கியிருக்கிறார்கள்.

  இதனால் படம் மிகப் பெரிய விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு ஏரியாவுக்கு மட்டும் ரூ. 4 கோடிகொடுத்து படத்தை வாங்கியிருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வெளிநாட்டு உரிமை,கேசட் உரிமை, டிவி உரிமை என படம் குறைந்தபட்சம் நிச்சயம் ரூ. 35 கோடிக்கு விற்கும் என்கிறார்கள்.


  தனது பிஸி ஷெட்யூலுக்கு இடையில் சூர்யா நடித்த கஜினி படத்தைப் பார்த்த கமல் அவரை பாராட்டித் தீர்த்துவிட்டாராம். தொந்திபோடுதே.. அதை குறைச்சுக்கோ என்று அறிவுறுத்தியவர் அமெரிக்காவில் இருந்து அதற்கான ஒரு ஸ்பெஷல் உடற்பயிற்சிசாதனத்தையும் வாங்கி சூர்யாவுக்கு அனுப்பி வைத்தாராம்.

  தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி புளாகாங்கிதமடைகிறார் சூர்யா.


  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X