ரூ.100 கோடி: எகிறிய கமல்! தன்னிடம் ரூ. 100 கோடி பேரம் பேச வந்த ஆளும் தரப்பினரை வாட்டி எடுத்துவிட்டே திருப்பி அனுப்பிவைத்திருக்கிறார் கமல்ஹாசன்.முதலில் ரஜினிக்கு வலை வீசி தோற்ற ஆளும் தரப்பு பின்னர் விஜய்காந்த், கார்த்திக்கையும் வளைக்க முயன்றுதோற்றது.சிம்ரன், விந்தியா, கோவை சரளா, செந்திலு, விஜயகுமார், முரளி போன்ற சூப்பர் ஸ்டார்கள் களத்தில் குதித்தும்களத்தில் பெரிய அளவில் இம்பாக்ட் இல்லை என்று உளவுப் பிரிவு ரிப்போர்ட் கொடுத்ததும் சரத்குமாருக்குவலை வீசப்பட்டது.ஆனால், அவர் தனது ரேட்டை ரூ. 20ல் இருந்து ரூ. 30 கோடியாக உயர்த்திவிட்டு சிங்கப்பூருக்குப் போய்விடவேஅவரை விரட்டிப் போய் பிடித்த நடராஜன் அங்கேயே வைத்து ரூ. 30 கோடிக்கு மடக்கிவிட்டு வந்தார்என்கிறார்கள்.இதையடுத்தே அவர் அதிமுகவில் ஐக்கியமானார் என்கிறார்கள். மேலும் விரைவிலேயே ராதிகாவுக்கு ஆளும்கட்சியின் சேனலில் மிகப் பெரிய பதவி தரப்படும் என்றும் சொல்கிறார்கள். 60:40 என்ற வகையில் லாபத்தைஷேர் செய்து கொள்ளும் வகையில் இருக்குமாம் அந்தப் பொறுப்பு. சேனலை சன் டிவிக்குப் போட்டியாக முன்னேற்ற வேண்டும் என்பதே ஒரே கண்டிசன்.முன்னதாக தங்கள் தரப்புக்கு வெற்றியை உறுதி செய்ய சரத்குமாரை விட பலமான ஒரு ஆள் வேண்டும் என்றமுடிவோடு முதலில் ரஜினியை நெருங்கிய ஆளும் தரப்பு.இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல் போகவே, என் மன்றக் கொடியை யாரும் தேர்தல் வேலைக்குப்பயன்படுத்தக் கூடாது என்று அறிக்கை விட்டு ஆளும் தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார் ரஜினி.அதன் பின்னரே சரத் கேட்டதைத் தர முன் வந்தது என்கிறார்கள்.சரத் வந்தாலும் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று ரிப்போர்ட் போகவே, கமலுக்கு வலைவீசப்பட்டதாம்.கமலை அவரது வீட்டிலேயே போய் சந்தித்து. ரூ. 100 கோடி தர்றேன்று மேலிடத்துல தொல்லிட்டாங்க. நீங்கஎங்க கட்சியில சேர்ந்துருங்க, எல்லா வசதியும் தர்றோம். மருதநாயக்தையும் முடிச்சுடலாம் என்று விந்தியாவிடம்பேசுவது மாதிரி பேரம் பேச டென்சனான கமல் முகத்தை மிகக் கோபமாக வைத்துக் கொண்டு,நீங்க என்ன பேசுறீங்க.. யாருக்கு விலை? என் உடம்புக்கா? என் சதை, எலும்புக்கா? இல்லை சினிமா கலைஞன்என்ற கமலுக்கா? என் உயிர், மூச்சு எல்லாமே சினிமா தான். கமல் என்ற கலைஞனுக்கு யாராலும் விலை தரமுடியாது. கமலோட விலை என்னென்னு தெரியுமா உங்களுக்கு? நான் சம்பாதித்தாலும் எல்லாதையும் இழந்துநடு ரோட்டுல நின்னாலும் சினிமாவை விட்டுப் போக மாட்டேன். நீங்க எப்படி இங்க பேரம் பேச வந்தீங்க என்றுவாட்டியெடுத்திருக்கிறார்.இதையடுத்து செல்போன்களில் அவசரமாக நம்பர்களை அழுத்தியபடி வெளியேயிருக்கிறது அந்தக் கும்பல்.தன்னிடம் போய் இப்படி பேச வந்தார்களே என்று நொந்து போன கமல், உடனடியாக அமெரிக்காவுக்குப்புறப்படும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அமெரிக்காவின் டிப்ளோமேடிக் விசா வைத்திருக்கும் கமல்அவசரமாக டிக்கெட் புக் செய்துவிட்டு நடிகர் நெப்போலியனுக்கு போன் போட்டிருக்கிறார்.விருமாண்டியில் நடித்ததில் இருந்து நெப்போலியன் கமலுக்கு நெருக்கம். கமலிடமிருந்து திடீர் போன் என்றதும்பிரச்சாரத்தில் இருந்த நெப்போலியன், சினிமா விஷயமாகத்தான் பேசுறார் என்று நினைத்து பேசியிருக்கிறார்.ஆனால், தன்னிடம் நடத்தப்பட்ட ரூ. 100 கோடி பேரம் குறித்து கோபத்துடன் விளக்கிய கமல் பின்னர் ரிலாக்ஸ்ஆகி, அவங்க என்னை மாதிரி அரசியலுக்கு சம்பந்தமில்லாத ஆளை வளைக்க வந்திருக்காங்கண்ணா, கலைஞர்தான் ஜெயிக்கப் போறார்னு தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லிருங்க..நான் அமெரிக்கா போறேன். எலெக்ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறமா தான் திரும்புவேன் என்று கூறியிருக்கிறார்.உடனே அதை தென் மாவட்ட பிரச்சாரத்தில் இருந்த கருணாநிதியின் காதுக்கு நெப்போலியன் கொண்டுசெல்லவே, அங்கு திடீரென நிருபர்கள் கூட்டத்தைக் கூட்டிய கருணாநிதி, நடிகரிடம் ரூ. 100 கோடி பேரம்நடந்திருக்கிறது என்று குண்டைப் போட்டார்.

By Staff

தன்னிடம் ரூ. 100 கோடி பேரம் பேச வந்த ஆளும் தரப்பினரை வாட்டி எடுத்துவிட்டே திருப்பி அனுப்பிவைத்திருக்கிறார் கமல்ஹாசன்.

முதலில் ரஜினிக்கு வலை வீசி தோற்ற ஆளும் தரப்பு பின்னர் விஜய்காந்த், கார்த்திக்கையும் வளைக்க முயன்றுதோற்றது.

சிம்ரன், விந்தியா, கோவை சரளா, செந்திலு, விஜயகுமார், முரளி போன்ற சூப்பர் ஸ்டார்கள் களத்தில் குதித்தும்களத்தில் பெரிய அளவில் இம்பாக்ட் இல்லை என்று உளவுப் பிரிவு ரிப்போர்ட் கொடுத்ததும் சரத்குமாருக்குவலை வீசப்பட்டது.

ஆனால், அவர் தனது ரேட்டை ரூ. 20ல் இருந்து ரூ. 30 கோடியாக உயர்த்திவிட்டு சிங்கப்பூருக்குப் போய்விடவேஅவரை விரட்டிப் போய் பிடித்த நடராஜன் அங்கேயே வைத்து ரூ. 30 கோடிக்கு மடக்கிவிட்டு வந்தார்என்கிறார்கள்.

இதையடுத்தே அவர் அதிமுகவில் ஐக்கியமானார் என்கிறார்கள். மேலும் விரைவிலேயே ராதிகாவுக்கு ஆளும்கட்சியின் சேனலில் மிகப் பெரிய பதவி தரப்படும் என்றும் சொல்கிறார்கள். 60:40 என்ற வகையில் லாபத்தைஷேர் செய்து கொள்ளும் வகையில் இருக்குமாம் அந்தப் பொறுப்பு.


சேனலை சன் டிவிக்குப் போட்டியாக முன்னேற்ற வேண்டும் என்பதே ஒரே கண்டிசன்.

முன்னதாக தங்கள் தரப்புக்கு வெற்றியை உறுதி செய்ய சரத்குமாரை விட பலமான ஒரு ஆள் வேண்டும் என்றமுடிவோடு முதலில் ரஜினியை நெருங்கிய ஆளும் தரப்பு.

இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல் போகவே, என் மன்றக் கொடியை யாரும் தேர்தல் வேலைக்குப்பயன்படுத்தக் கூடாது என்று அறிக்கை விட்டு ஆளும் தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார் ரஜினி.

அதன் பின்னரே சரத் கேட்டதைத் தர முன் வந்தது என்கிறார்கள்.

சரத் வந்தாலும் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று ரிப்போர்ட் போகவே, கமலுக்கு வலைவீசப்பட்டதாம்.

கமலை அவரது வீட்டிலேயே போய் சந்தித்து. ரூ. 100 கோடி தர்றேன்று மேலிடத்துல தொல்லிட்டாங்க. நீங்கஎங்க கட்சியில சேர்ந்துருங்க, எல்லா வசதியும் தர்றோம். மருதநாயக்தையும் முடிச்சுடலாம் என்று விந்தியாவிடம்பேசுவது மாதிரி பேரம் பேச டென்சனான கமல் முகத்தை மிகக் கோபமாக வைத்துக் கொண்டு,

நீங்க என்ன பேசுறீங்க.. யாருக்கு விலை? என் உடம்புக்கா? என் சதை, எலும்புக்கா? இல்லை சினிமா கலைஞன்என்ற கமலுக்கா? என் உயிர், மூச்சு எல்லாமே சினிமா தான். கமல் என்ற கலைஞனுக்கு யாராலும் விலை தரமுடியாது. கமலோட விலை என்னென்னு தெரியுமா உங்களுக்கு? நான் சம்பாதித்தாலும் எல்லாதையும் இழந்துநடு ரோட்டுல நின்னாலும் சினிமாவை விட்டுப் போக மாட்டேன். நீங்க எப்படி இங்க பேரம் பேச வந்தீங்க என்றுவாட்டியெடுத்திருக்கிறார்.

இதையடுத்து செல்போன்களில் அவசரமாக நம்பர்களை அழுத்தியபடி வெளியேயிருக்கிறது அந்தக் கும்பல்.

தன்னிடம் போய் இப்படி பேச வந்தார்களே என்று நொந்து போன கமல், உடனடியாக அமெரிக்காவுக்குப்புறப்படும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அமெரிக்காவின் டிப்ளோமேடிக் விசா வைத்திருக்கும் கமல்அவசரமாக டிக்கெட் புக் செய்துவிட்டு நடிகர் நெப்போலியனுக்கு போன் போட்டிருக்கிறார்.

விருமாண்டியில் நடித்ததில் இருந்து நெப்போலியன் கமலுக்கு நெருக்கம். கமலிடமிருந்து திடீர் போன் என்றதும்பிரச்சாரத்தில் இருந்த நெப்போலியன், சினிமா விஷயமாகத்தான் பேசுறார் என்று நினைத்து பேசியிருக்கிறார்.

ஆனால், தன்னிடம் நடத்தப்பட்ட ரூ. 100 கோடி பேரம் குறித்து கோபத்துடன் விளக்கிய கமல் பின்னர் ரிலாக்ஸ்ஆகி, அவங்க என்னை மாதிரி அரசியலுக்கு சம்பந்தமில்லாத ஆளை வளைக்க வந்திருக்காங்கண்ணா, கலைஞர்தான் ஜெயிக்கப் போறார்னு தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லிருங்க..நான் அமெரிக்கா போறேன். எலெக்ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறமா தான் திரும்புவேன் என்று கூறியிருக்கிறார்.

உடனே அதை தென் மாவட்ட பிரச்சாரத்தில் இருந்த கருணாநிதியின் காதுக்கு நெப்போலியன் கொண்டுசெல்லவே, அங்கு திடீரென நிருபர்கள் கூட்டத்தைக் கூட்டிய கருணாநிதி, நடிகரிடம் ரூ. 100 கோடி பேரம்நடந்திருக்கிறது என்று குண்டைப் போட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X