»   »  கமலின் மல்டிப்ளக்ஸ்!

கமலின் மல்டிப்ளக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சினிமாவுக்காகவே பிறந்து சினிமாவுக்காகவே பாடுபட்டு வரும் கமல்ஹாசன் மிகப்பெரிய திரையரங்க வளாகத்தைக் கட்டத் திட்டமிட்டுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் சம்பாதிப்பவர்கள் அதில் கொஞ்சத்தை சென்னையிலும் மிச்சத்தைதங்கள் சொந்த மாநிலத்திலும் ஊரிலும் கல்யாண மண்டபம், ஹோட்டல், ரியல்எஸ்டேட் என அசையா சொதுக்களில் முதலீடு செய்து வருகின்றனர்.

ஆனால், இப்படி பில்டிங்குகள் வாங்கிப் போட்டு செட்டில் ஆகி சந்தோஷமாகஇருப்பதை விட்டுவிட்டு தனது வருமானத்தையெல்லாம் திரும்பத் திரும்பசினிமாவிலேயே போடும் வித்தியாசமான மனிதர் கமல்.

அதில் அவருக்கு லாபத்தை விட இழப்பே ஜாஸ்தி. இருந்தாலும் சளைக்காமல்சினிமாவிலேயே தனது சம்பாத்தியத்தை முடக்கி வருகிறார்.

அதனால்தான் ரஜினிக்கு அடுத்து அதிகம் சம்பளம் வாங்குபவராக இருந்தும் கூடஇப்போதைய இளம் நடிகர்களை விட குறைந்த சொத்துக்களுடன் படு சாதாரணமாகஇருக்கிறார் கமல்.


அதிகபட்சமாக அவர் வாங்கியது ஒரு பென்ஸ் காரும், கொடைக்கானலில் ஒருஎஸ்டேட்டும் தான். ஆழ்வார்பேட்டை வீட்டைக் கூட இன்னும்பிரமாண்டமாக்கவில்லை.

இப்போது தான் ஆழ்வார்பேட்டையை விட்டுவிட்டு மகாபலிபுரம் சாலையில் ஒருபெரிய பங்களாவுக்குக் குடிபெயர்ந்தார். சரி வீட்டைத் தான் கட்டிக் கொண்டுவந்துவிட்டார் என்று பார்த்தார், அது வாடகை பங்களாவாம்.

இப்படியாக சம்பாத்தியத்தையே குறியாக வைத்துக் கொள்ளாமல் சாதாரணர்கள்போல வாழ்பவர் கமல்.

இப்போது புதிய சினிமா முயற்சி ஒன்றில் இறங்கவுள்ளார். ஆனால், இதுசம்பாத்தியமும் தரத் தக்கது.

வெளிநாடுகளில் இருப்பதைப் போல அதி நவீன வசதிகளுடன் கூடிய மல்டிப்ளக்ஸ்வளாகம் ஒன்றைக் கட்டத் திட்டமிட்டுள்ளாராம் கமல்.

இதற்காக பெரிய அளவில் சென்னை அருகே நிலத்தை வாங்கிப் போட்டுள்ளார் கமல்.தென்னகத்திலேயே இல்லாத அளவுக்கு படு அசத்தலாக இந்த மல்டிப்ளக்ஸ் வளாகம்அமையவுள்ளதாம்.

திரையரங்கங்கள், பொழுது போக்கு விளையாட்டுக்கள், ஹோட்டல்கள் எனஏகப்பட்ட ஐட்டங்கள் இந்த வளாகத்தில் அமையவுள்ளதாம். இதற்காக பெரியமுதலீட்டைப் போடப் போகிறாராம்.


தமிழகத்தில் நல்ல தியேட்டர்கள் இல்லை என்பது கமல்ஹாசனின் பொதுவான புகார்,ரொம்ப காலமாக இதை கூறி வருகிறார். நல்ல தியேட்டர்கள் இல்லாத காரணத்தால்எத்தனை கோடிகளைப் போட்டு படத்தை எடுத்தாலும் அவை நல்ல சவுண்ட் சிஸ்டம்இல்லாத காரணத்தால் தோல்வியைத் தழுவுகின்றன என்பது கமலின் வருத்தம்.

அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் தனது மல்டிப்ளக்ஸை அமைக்கப்போகிறாராம்.

மல்டி பிளக்சில் சவுண்ட் சிஸ்டத்தை மட்டும் கவனிக்காமல், வருமான சிஸ்டத்தையும்கரெக்டாக வைத்துக் கொள்ளுங்கள்.. கமல் சார்.

Read more about: kamal to build a multiplex
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil