»   »  நிச்சயம் வேட்டையாடுவோம்: கமல்- காஜா தயாரிப்பாளர் காஜா மைதீனுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது. எனவே வேட்டையாடு விளையாடு விரைவில் தொடங்கி சிறந்த படமாக வெளியாகும் என்று நடிகர் கமல்ஹாசன்கூறியுள்ளார்.காஜா மைதீன் தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரை தற்கொலை அளவுக்குத் தள்ளியது விஜய்காந்தா அல்லது கமல்ஹாசனா என்று கோடம்பாக்கத்தில் ஒரு பட்டிமன்றமேநடந்து கொண்டிருக்கிறது. விஜய்காந்த் சம்பளத்துக்கு மேல் சம்பளத்தை டிமாண்ட் செய்து வாங்கிக் கொண்டு, படத்தைமுடித்துத் தராமல், தனது சொந்தப் படத்தில் நடிக்கப் போனது ஒரு காரணம் என்கிறார்கள்.அதே நேரத்தில், வேட்டையாடு விளையாடு படம் தொடர்பாக கமலுக்கும் இயக்குனர் கெளதமுக்கும் ஒத்துப் போகவிவல்லை.கெளதமின் கதையை கமல் மாற்ற, அதை கெளதம் மாற்ற என காலம் ஓடி இருக்கிறது.கமலுக்கு ரூ. 2.50 கோடி, கெளதமுக்கு ரூ. 1.65 கோடி மற்றும் ஜோதிகா உள்ளிட்டோருக்கு சம்பளம் என இந்தப் படத்துக்காகஒரு மார்வாடியிடம் ரூ. 5 கோடி கடன் வாங்கித் தான் காஜா மொய்தீன் வட்டி சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்றும்சொல்கிறார்கள்.மேலும் படத்தை தனது ராஜ்கமல் நிறுவனமே பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கும் என கமல் சொன்னதாகவும்,கெளதமோ தானே தயாரிப்பதாகவும் சொன்னதாகவும் இதனால் தான் இருவரும் மனத்தாங்கல் என்றும் கூறுகிறார்கள்.இந்த இருவரின் மோதலால் தான் படப்பிடிப்பு தொடங்காமல் போனதாக பேச்சு இருக்கிறது.இந் நிலையில் கமல்ஹாசன், தான் காஜா மைதீனிடமிருந்து முன் பணமாக பெற்ற ரூ. 2.5 கோடியை திருப்பித் தருவதாகஅறிவித்தார். அதேபோல படத்தின் இயக்குனர் கெளதமும் தான் ன்பணமாக பெற்ற ரூ. 1.6 கோடியைத் திருப்பித் தருவதாகஅறிவித்தார்.அதன்படி இருவரும் இன்று காஜா மைதீனை மருத்துவமனையில் சந்தித்துப் பேசினர். அப்போது முன் பணத் தொகையைஇருவருமே திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.பின்னர் கமல், காஜா மைதீன், கெளதம் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.செய்தியாளர்களிடம் கமல் கூறுகையில், காஜா மைதீனின் பிரசிசனை மிகச் சிறியதுதான். அது தற்போது தீர்க்கப்பட்டு விட்டது.அதை அவர் முன்பே கூறியிருந்தால், எப்போதோ படத்தை ஆரம்பித்திருக்கலாம்.எனக்கும் காஜாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றே படத்தை ஆரம்பிப்பதாக இருந்தாலும் நான் நடித்துக்கொடுக்கத் தயார். படத்தை உருவாக்க நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். ஒரு நடிகனாக மட்டுமல்ல மனிதாபிமானம்உள்ளவனாக இருந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.அதேபோல எனக்கும் இயக்குனர் கெளதமுக்கும் இடையே பிரச்சினை என்றும் செய்திகள் வந்தன. அதிலும் உண்மை இல்லை.எங்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.வேட்டையாடு விளையாடு படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. அதை நான் நிச்சயம்நிறைவேற்றுவேன். திட்டமிட்டபடி அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்கும். அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போம்.நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால் தயாரிப்பாளர்களுக்குப் பிரச்சினை என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது.எல்லோருக்கும் அதிக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. மார்க்கெட் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிக அளவில் சம்பளம்கொடுக்கிறார்கள். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் இதைக் கூறுகிறேன்.நானே ஆரம்ப காலத்தில் கே.பாலச்சந்தருடைய படங்களில் ரூ. 4,000, 12,000 சம்பளம் வாங்கி நடித்துள்ளேன். வெற்றி பெறும்நடிகர்களைத்தான் தயாரிப்பாளர்கள் தேடுகிறார்கள்.எனது சில படங்கள் தோல்வி அடைந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. எனது படம் நன்றாக வர வேண்டும் என்றுதான் நான்விரும்புவேன் என்றார் கமல்.கெளதம் கூறுகையில், கமல் சாருடன் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்த பிறகுதான் நானேதெரிந்து கொண்டேன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. படம் சிறப்பாக முடிவடையும், நல்ல படத்தை நாங்கள்கொடுப்போம் என்றார்.காஜா மைதீன் கூறுகையில், நான் எடுத்தது தவறான முடிவு. அதை இப்போது உணருகிறேன். நான் எடுத்த முடிவுக்கும்,வேட்டையாடு விளையாடு படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கு வேறு காரணம். அதை நான் விரைவில்வெளியிடுவேன்.வேட்டையாடு படத்தை உடனே தொடங்குங்கள். நானும் உதவுகிறேன் என்று கமல் சார் கூறியுள்ளார். எனவே இன்னும் பத்துநாட்களில் படத்தைத் தொடங்கவுள்ளோம். எனக்கும் கமல் சாருக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.சிலர் எனக்கு எதிராக, என்னைப் பழிவாங்க சில பிரச்சினைகளை உருவாக்கியதால் மனம் பாதிக்கப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டேன். இப்போது நான் தெளிவாகி விட்டேன். விரைவில் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். டிசம்பர் 15ம் தேதி இந்தப் படம்வெளியாகும்.விஜய்காந்த் நடிக்கும் பேரரசு படமும் அடுத்த மாதம் வெளியாகி விடும் என்றார் காஜா மைதீன்.உடனிருந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறுகையில், ஒரு படம் தயாரிக்கும்போது தயாரிப்பாளர்கள்பிரச்சினைகளை சந்திப்பது சாதாரண விஷயம். அதை சரியான முறையில் கையாள வேண்டும். இப்போது காஜா மைதீன்பிரச்சினைக்கு தீர்ப்பு கிடைத்து விட்டது என்றார்.

நிச்சயம் வேட்டையாடுவோம்: கமல்- காஜா தயாரிப்பாளர் காஜா மைதீனுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது. எனவே வேட்டையாடு விளையாடு விரைவில் தொடங்கி சிறந்த படமாக வெளியாகும் என்று நடிகர் கமல்ஹாசன்கூறியுள்ளார்.காஜா மைதீன் தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரை தற்கொலை அளவுக்குத் தள்ளியது விஜய்காந்தா அல்லது கமல்ஹாசனா என்று கோடம்பாக்கத்தில் ஒரு பட்டிமன்றமேநடந்து கொண்டிருக்கிறது. விஜய்காந்த் சம்பளத்துக்கு மேல் சம்பளத்தை டிமாண்ட் செய்து வாங்கிக் கொண்டு, படத்தைமுடித்துத் தராமல், தனது சொந்தப் படத்தில் நடிக்கப் போனது ஒரு காரணம் என்கிறார்கள்.அதே நேரத்தில், வேட்டையாடு விளையாடு படம் தொடர்பாக கமலுக்கும் இயக்குனர் கெளதமுக்கும் ஒத்துப் போகவிவல்லை.கெளதமின் கதையை கமல் மாற்ற, அதை கெளதம் மாற்ற என காலம் ஓடி இருக்கிறது.கமலுக்கு ரூ. 2.50 கோடி, கெளதமுக்கு ரூ. 1.65 கோடி மற்றும் ஜோதிகா உள்ளிட்டோருக்கு சம்பளம் என இந்தப் படத்துக்காகஒரு மார்வாடியிடம் ரூ. 5 கோடி கடன் வாங்கித் தான் காஜா மொய்தீன் வட்டி சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்றும்சொல்கிறார்கள்.மேலும் படத்தை தனது ராஜ்கமல் நிறுவனமே பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கும் என கமல் சொன்னதாகவும்,கெளதமோ தானே தயாரிப்பதாகவும் சொன்னதாகவும் இதனால் தான் இருவரும் மனத்தாங்கல் என்றும் கூறுகிறார்கள்.இந்த இருவரின் மோதலால் தான் படப்பிடிப்பு தொடங்காமல் போனதாக பேச்சு இருக்கிறது.இந் நிலையில் கமல்ஹாசன், தான் காஜா மைதீனிடமிருந்து முன் பணமாக பெற்ற ரூ. 2.5 கோடியை திருப்பித் தருவதாகஅறிவித்தார். அதேபோல படத்தின் இயக்குனர் கெளதமும் தான் ன்பணமாக பெற்ற ரூ. 1.6 கோடியைத் திருப்பித் தருவதாகஅறிவித்தார்.அதன்படி இருவரும் இன்று காஜா மைதீனை மருத்துவமனையில் சந்தித்துப் பேசினர். அப்போது முன் பணத் தொகையைஇருவருமே திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.பின்னர் கமல், காஜா மைதீன், கெளதம் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.செய்தியாளர்களிடம் கமல் கூறுகையில், காஜா மைதீனின் பிரசிசனை மிகச் சிறியதுதான். அது தற்போது தீர்க்கப்பட்டு விட்டது.அதை அவர் முன்பே கூறியிருந்தால், எப்போதோ படத்தை ஆரம்பித்திருக்கலாம்.எனக்கும் காஜாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றே படத்தை ஆரம்பிப்பதாக இருந்தாலும் நான் நடித்துக்கொடுக்கத் தயார். படத்தை உருவாக்க நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். ஒரு நடிகனாக மட்டுமல்ல மனிதாபிமானம்உள்ளவனாக இருந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.அதேபோல எனக்கும் இயக்குனர் கெளதமுக்கும் இடையே பிரச்சினை என்றும் செய்திகள் வந்தன. அதிலும் உண்மை இல்லை.எங்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.வேட்டையாடு விளையாடு படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. அதை நான் நிச்சயம்நிறைவேற்றுவேன். திட்டமிட்டபடி அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்கும். அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போம்.நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால் தயாரிப்பாளர்களுக்குப் பிரச்சினை என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது.எல்லோருக்கும் அதிக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. மார்க்கெட் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிக அளவில் சம்பளம்கொடுக்கிறார்கள். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் இதைக் கூறுகிறேன்.நானே ஆரம்ப காலத்தில் கே.பாலச்சந்தருடைய படங்களில் ரூ. 4,000, 12,000 சம்பளம் வாங்கி நடித்துள்ளேன். வெற்றி பெறும்நடிகர்களைத்தான் தயாரிப்பாளர்கள் தேடுகிறார்கள்.எனது சில படங்கள் தோல்வி அடைந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. எனது படம் நன்றாக வர வேண்டும் என்றுதான் நான்விரும்புவேன் என்றார் கமல்.கெளதம் கூறுகையில், கமல் சாருடன் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்த பிறகுதான் நானேதெரிந்து கொண்டேன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. படம் சிறப்பாக முடிவடையும், நல்ல படத்தை நாங்கள்கொடுப்போம் என்றார்.காஜா மைதீன் கூறுகையில், நான் எடுத்தது தவறான முடிவு. அதை இப்போது உணருகிறேன். நான் எடுத்த முடிவுக்கும்,வேட்டையாடு விளையாடு படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கு வேறு காரணம். அதை நான் விரைவில்வெளியிடுவேன்.வேட்டையாடு படத்தை உடனே தொடங்குங்கள். நானும் உதவுகிறேன் என்று கமல் சார் கூறியுள்ளார். எனவே இன்னும் பத்துநாட்களில் படத்தைத் தொடங்கவுள்ளோம். எனக்கும் கமல் சாருக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.சிலர் எனக்கு எதிராக, என்னைப் பழிவாங்க சில பிரச்சினைகளை உருவாக்கியதால் மனம் பாதிக்கப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டேன். இப்போது நான் தெளிவாகி விட்டேன். விரைவில் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். டிசம்பர் 15ம் தேதி இந்தப் படம்வெளியாகும்.விஜய்காந்த் நடிக்கும் பேரரசு படமும் அடுத்த மாதம் வெளியாகி விடும் என்றார் காஜா மைதீன்.உடனிருந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறுகையில், ஒரு படம் தயாரிக்கும்போது தயாரிப்பாளர்கள்பிரச்சினைகளை சந்திப்பது சாதாரண விஷயம். அதை சரியான முறையில் கையாள வேண்டும். இப்போது காஜா மைதீன்பிரச்சினைக்கு தீர்ப்பு கிடைத்து விட்டது என்றார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் காஜா மைதீனுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது. எனவே வேட்டையாடு விளையாடு விரைவில் தொடங்கி சிறந்த படமாக வெளியாகும் என்று நடிகர் கமல்ஹாசன்கூறியுள்ளார்.

காஜா மைதீன் தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை தற்கொலை அளவுக்குத் தள்ளியது விஜய்காந்தா அல்லது கமல்ஹாசனா என்று கோடம்பாக்கத்தில் ஒரு பட்டிமன்றமேநடந்து கொண்டிருக்கிறது. விஜய்காந்த் சம்பளத்துக்கு மேல் சம்பளத்தை டிமாண்ட் செய்து வாங்கிக் கொண்டு, படத்தைமுடித்துத் தராமல், தனது சொந்தப் படத்தில் நடிக்கப் போனது ஒரு காரணம் என்கிறார்கள்.

அதே நேரத்தில், வேட்டையாடு விளையாடு படம் தொடர்பாக கமலுக்கும் இயக்குனர் கெளதமுக்கும் ஒத்துப் போகவிவல்லை.கெளதமின் கதையை கமல் மாற்ற, அதை கெளதம் மாற்ற என காலம் ஓடி இருக்கிறது.

கமலுக்கு ரூ. 2.50 கோடி, கெளதமுக்கு ரூ. 1.65 கோடி மற்றும் ஜோதிகா உள்ளிட்டோருக்கு சம்பளம் என இந்தப் படத்துக்காகஒரு மார்வாடியிடம் ரூ. 5 கோடி கடன் வாங்கித் தான் காஜா மொய்தீன் வட்டி சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்றும்சொல்கிறார்கள்.

மேலும் படத்தை தனது ராஜ்கமல் நிறுவனமே பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கும் என கமல் சொன்னதாகவும்,கெளதமோ தானே தயாரிப்பதாகவும் சொன்னதாகவும் இதனால் தான் இருவரும் மனத்தாங்கல் என்றும் கூறுகிறார்கள்.

இந்த இருவரின் மோதலால் தான் படப்பிடிப்பு தொடங்காமல் போனதாக பேச்சு இருக்கிறது.இந் நிலையில் கமல்ஹாசன், தான் காஜா மைதீனிடமிருந்து முன் பணமாக பெற்ற ரூ. 2.5 கோடியை திருப்பித் தருவதாகஅறிவித்தார். அதேபோல படத்தின் இயக்குனர் கெளதமும் தான் ன்பணமாக பெற்ற ரூ. 1.6 கோடியைத் திருப்பித் தருவதாகஅறிவித்தார்.அதன்படி இருவரும் இன்று காஜா மைதீனை மருத்துவமனையில் சந்தித்துப் பேசினர். அப்போது முன் பணத் தொகையைஇருவருமே திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.பின்னர் கமல், காஜா மைதீன், கெளதம் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் கமல் கூறுகையில், காஜா மைதீனின் பிரசிசனை மிகச் சிறியதுதான். அது தற்போது தீர்க்கப்பட்டு விட்டது.அதை அவர் முன்பே கூறியிருந்தால், எப்போதோ படத்தை ஆரம்பித்திருக்கலாம்.

எனக்கும் காஜாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றே படத்தை ஆரம்பிப்பதாக இருந்தாலும் நான் நடித்துக்கொடுக்கத் தயார். படத்தை உருவாக்க நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். ஒரு நடிகனாக மட்டுமல்ல மனிதாபிமானம்உள்ளவனாக இருந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.

அதேபோல எனக்கும் இயக்குனர் கெளதமுக்கும் இடையே பிரச்சினை என்றும் செய்திகள் வந்தன. அதிலும் உண்மை இல்லை.எங்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

வேட்டையாடு விளையாடு படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. அதை நான் நிச்சயம்நிறைவேற்றுவேன். திட்டமிட்டபடி அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்கும். அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போம்.

நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால் தயாரிப்பாளர்களுக்குப் பிரச்சினை என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது.எல்லோருக்கும் அதிக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. மார்க்கெட் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிக அளவில் சம்பளம்கொடுக்கிறார்கள். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் இதைக் கூறுகிறேன்.

நானே ஆரம்ப காலத்தில் கே.பாலச்சந்தருடைய படங்களில் ரூ. 4,000, 12,000 சம்பளம் வாங்கி நடித்துள்ளேன். வெற்றி பெறும்நடிகர்களைத்தான் தயாரிப்பாளர்கள் தேடுகிறார்கள்.

எனது சில படங்கள் தோல்வி அடைந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. எனது படம் நன்றாக வர வேண்டும் என்றுதான் நான்விரும்புவேன் என்றார் கமல்.

கெளதம் கூறுகையில், கமல் சாருடன் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்த பிறகுதான் நானேதெரிந்து கொண்டேன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. படம் சிறப்பாக முடிவடையும், நல்ல படத்தை நாங்கள்கொடுப்போம் என்றார்.

காஜா மைதீன் கூறுகையில், நான் எடுத்தது தவறான முடிவு. அதை இப்போது உணருகிறேன். நான் எடுத்த முடிவுக்கும்,வேட்டையாடு விளையாடு படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கு வேறு காரணம். அதை நான் விரைவில்வெளியிடுவேன்.

வேட்டையாடு படத்தை உடனே தொடங்குங்கள். நானும் உதவுகிறேன் என்று கமல் சார் கூறியுள்ளார். எனவே இன்னும் பத்துநாட்களில் படத்தைத் தொடங்கவுள்ளோம். எனக்கும் கமல் சாருக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

சிலர் எனக்கு எதிராக, என்னைப் பழிவாங்க சில பிரச்சினைகளை உருவாக்கியதால் மனம் பாதிக்கப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டேன். இப்போது நான் தெளிவாகி விட்டேன். விரைவில் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். டிசம்பர் 15ம் தேதி இந்தப் படம்வெளியாகும்.

விஜய்காந்த் நடிக்கும் பேரரசு படமும் அடுத்த மாதம் வெளியாகி விடும் என்றார் காஜா மைதீன்.

உடனிருந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறுகையில், ஒரு படம் தயாரிக்கும்போது தயாரிப்பாளர்கள்பிரச்சினைகளை சந்திப்பது சாதாரண விஷயம். அதை சரியான முறையில் கையாள வேண்டும். இப்போது காஜா மைதீன்பிரச்சினைக்கு தீர்ப்பு கிடைத்து விட்டது என்றார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil