ஹீரோ .. ஹீரோ ..

By Staff

தெனாலி வெற்றிப் படத்தையடுத்து கமல் - ஜோதிகா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வருகிறது.

வருடத்துக்கு ஒரு படம் என்று செலக்டிவ் ஆக இருக்கும் கமல் தற்போது 4 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கிருஷ்ணா லீலா ( பெயர் மாறும் வாய்ப்புள்ளது) என்ற படத்தில் அடுத்துநடிக்கவிருப்பதாக விருமாண்டி பட ரிலீசுக்குப் பின் கமல் கூறினார்.

அது தொடர்பான டிஸ்கஷன் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, கெளதம் இயக்கத்தில் ஒரு படத்துக்கு ஓ.கே.சொன்னார்.

இதற்கிடையே இயக்குனர் பாலாவும், கமலும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள்; விரைவில்ஒரு படம் பண்ணப் போகிறார்கள் என்று பேச்சு கிளம்பியது.

இதை இருதரப்பும் மறுக்கவில்லை.

இப்போது சரண் இயக்கத்தில் ஜெமினி கலர் லேப் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்கமல்.

கடந்த வருட இறுதியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்ற ஹிந்திப் படம் வசூலில் சக்கை போடு போட்டது.

சஞ்சய் தத் - கிரேஸி சிங் ஜோடியாக நடித்திருந்தனர். செம காமெடி படம் என்பதால் இதை தமிழில் தயாரிக்க,ஜெமினி ஸ்டூடியோவின் மனோகர் பிரசாத் ஒரு கோடி ரூபாய் கொடுத்து ரீமேக் உரிமையை வாங்கினார்.

முதலில் விக்ரமை அணுகி கால்ஷீட் கேட்டார். கால்ஷீட் முழுவதையும் அந்நியன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர்வாரிச் சுருட்டிக் கொண்டதால், நடிக்க ஆசையிருந்தும் விக்ரமால் இந்தப் படத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

அடுத்து கமலிடம் கால்ஷீட் கேட்டார் மனோகர் பிரசாத். ஏ கிளாஸ் காமெடி என்பதால் கமலும் உடனடியாக ஒத்துக்கொண்டார். உடனே மளமளவென வேலைகளை ஆரம்பித்த மனோகர் பிரசாத், இயக்கத்துக்கு சரணையும்,கதாநாயகி வேடத்துக்கு ஜோதிகாவையும் புக் செய்து விட்டார்.

அருள்(நாளை ரிலீஸ்) , பேரழகன் (மே 6ம் தேதி ரிலீஸ்) படங்கள் முடிந்து விட்டதால் ஜோதிகாவும் தயங்காமல்கால்ஷீட் கொடுத்து விட்டார். மே 15ம் தேதி படத்துக்கு பூஜை போடப்படுகிறது.

கமலும், இயக்குனர் சரணும் கே.பாலசந்தர் என்ற பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் பாலாவும் கமலும் இணையும் படம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்றும், இளையராஜாதான்அதற்கு இசை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இயக்குனர் மணிரத்னம் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில்,கமலுடன் ஒரு படம் பண்ணுவது குறித்து இருவரும் விவாதித்து வருகிறோம்; கமலுக்குத் தீனி போடும் வகையில்கதைதான் கிடைக்க மாட்டேன் என்கிறது என்று கூறியிருந்தார்.

மொத்தத்தில் கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X