சச்சின் விஜய் மாதிரி இருக்காரு.. ஜேசன் சஞ்சய்க்கு தொல்லை.. குட்டி வடிவேலு சொன்ன சீக்ரெட்

சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் சிறந்த படம் எனவும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மேலும், இப்படத்தில் நடித்த சுட்டி பையன் கமலேஷை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். காமெடியில் கலக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். டூரிஸ்ட் ஃபேமிலியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களி்ல் கமிட் ஆகியுள்ள கமலேஷ் விஜய் குறித்தும் அவரது மகன் குறித்தும் பேசியிருக்கும் வீிடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மே 1ஆம் தேதி வெளியான டூரீஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. இலங்கை தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இலங்கையில் இருந்து தப்பி வரும் ஒரு குடும்பம் சென்னையில் தங்களது அடையாளங்களை மறைத்து, தேசம் மறந்து வாழ்ந்து வருகிறார்கள். இதில் வரும் பிரச்னைகள், ஒரு தெருவுக்குள் இருக்கும் மக்கள் அவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை கலகலப்பான காமெடி, காதல், எமோஷனலுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இப்படத்தில் சசிகுமார், சி்ம்ரனை தாண்டி சுட்டி பையன் கமலேஷை அனைவரும் பாராட்டு வருகின்றனர்.

kamalesh-said-that-jason-sanjay-is-like-vijay-in-the-movie-sachien

அடுத்த வடிவேலு: சசிகுமாருக்கு இரண்டாவது பையனாக நடித்திருக்கும் கமலேஷ் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். கமலேஷ் மிகவும் கவர்ந்துவிட்டதாகவும், குட்டி வடிவேலுவை பார்த்தது போன்ற உணர்வை தருகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாய் குட்டியை திருடி வந்து போலீசிடம் பொய் சொல்வது, காதல் தோல்வியில் இருக்கும் அண்ணனை தேற்ற மம்பட்டியான் பாட்டை போட்டு கலகலப்பை ஏற்படுத்துவது, சீரியஸாக இருக்கும் தந்தையிடம் ஜாலியாக உன் போட்டோ இல்லை என கேட்பது என அனைத்து காட்சிகளிலும் கைதட்டல்களை பெறுகிறார் கமலேஷ். அடுத்த வடிவேலுவாக வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சினிமா ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

kamalesh-said-that-jason-sanjay-is-like-vijay-in-the-movie-sachien

விஜய் மாதிரி ஜேசன் சஞ்சய்: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் பிரபலமடைந்துள்ள கமலேஷ், ராகவா லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா 4 மற்றும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சந்தீப் கிஷனை வைத்து இயக்கி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்பே இந்த 2 படங்களில் நடிக்க கமிட் ஆகிவிட்டதாகவும் கமலேஷ் தெரிவித்தார். மேலும், ஜேசன் சஞ்சய் குறித்து பேசிய கமலேஷ், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டீசரை பார்த்து விட்டு ஜேசன் சஞ்சய் போன் பண்ணி நடிக்க கூப்பிட்டார். அவரது படத்தில் நடித்து வருகிறேன். ஜேசன் சஞ்சய் ரொம்ப ஜாலியாகவும் அதே நேரத்தில் விஜய் சார் மாதிரியே ரொம்ப சைலண்ட்டாக இருப்பார். நான் அவரிடம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்வது, விஜய் சாரை பார்க்க எப்போ கூட்டிட்டு போவீங்கனுதான் கேட்பேன். ஷூட்டிங் வந்துவிட்டால் அதையே கேட்டு தொல்லை செய்வேன். அப்புறம் ஒருநாள் விஜய் சாரை பார்க்க கூட்டிட்டு போறேன் சொன்னாரு. அப்படியே விஜய் சார் மாதிரியே ஜேசன் சஞ்சய் இருக்காரு. சச்சின் படத்துல வர விஜய் மாதிரிதான் ஜேசன் சஞ்சயும் இருக்கிறார் என கமலேஷ் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சூரி சார் வந்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை ஒரே ஆள் தூக்கி நிப்பாட்டிருக்க என பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X