twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் 60: களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய உலக நாயகனின் திரைப்பயணம் #KamalHaasan60

    |

    Recommended Video

    Kamal Hassan:60 Shades of Kamal| Filmibeat Tamil

    சென்னை: அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே என்று 1959ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறு பாலகனாக அறிமுகமாகி பாடி உலக நாயகனாக உயர்ந்து சினிமாதுறையில் இன்னமும் தொடர்ந்து சாதித்துக்கொண்டிருக்கும் கமல்ஹாசனின் திரைப்பயணம் தொடங்கி 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த சீனிவாசன், ராஜலட்சுமி அம்மையாருக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள். அதில் கடைக்குட்டி சிங்கம் தான் நமது உலக நாயகன் நம்மவர் பத்மஸ்ரீ, டாக்டர் கமலஹாசன். அவரின் திரையுலக பிரவேசம் மிகவும் எதேச்சையாக நடந்த ஒன்று.

    விடுமுறைக்கு சென்னைக்கு வந்த பொழுது குடும்ப நண்பர் ஒருவருடன் ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு ஷூட்டிங் பார்க்க சென்ற இடத்தில் கமலின் துறுதுறுப்பை பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள், கமலை குழந்தை நட்சத்திரமாக தனது தயாரிப்பில் உருவான களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகம் செய்தார்.

    களத்தூர் கண்ணம்மா 60

    களத்தூர் கண்ணம்மா 60

    அன்று களத்தில் இறங்கிய கமல்ஹாசன் இன்று வரை திரையுலகை மட்டும் இல்லாமல் அரசியலையும் கலக்கி கொண்டிருக்கிறார். களமிறங்கிய முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர். களத்தூர் கண்ணம்மா வெளியாகி 60 ஆண்டுகள் ஆகின்றன.
    கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கை 60 ஆண்டுகள் ஆன பின்பும் வெற்றிகரமாக சளைக்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த கலைஞனின் கலைப் பயணத்தை திரையுலம் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கை 60 ஆண்டுகள் ஆன பின்பும் வெற்றிகரமாக சளைக்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த கலைஞனின் கலைப் பயணத்தை திரையுலம் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோ

    குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோ

    களத்தூர் கண்ணம்மாவை தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த ஆனந்த ஜோதி உள்பட, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல், வளர்ந்து இளைஞனான உடன் அனைத்து விதமான நடனங்களையும் கற்று கரைத்துக் குடித்துவிட்டார். இதன் காரணமாக மீண்டும் திரைத்துறையில் களமிறங்கிய கமல்ஹாசன் நடன இயக்குநராகவே விரும்பினார். ஆனால் விதி அவரை மீண்டும் நடிகனாகவே இருக்க நிர்பந்தம் செய்தது என்ன செய்ய.

    கமல் நற்பணி மன்றம்

    கமல் நற்பணி மன்றம்

    1973ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் கமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ஃபிலிம்பேர் விருதையும் கைப்பற்றினர். தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக அமைத்த முதல் இந்திய நடிகர் கமல்ஹாசன் தான்.

    உலக நாயகன்

    உலக நாயகன்

    நடிப்பு, நடனம், தயாரிப்பு, இயக்கம், பாடகர், திரைக்கதை என பல பரிமாணங்களிலும் தனது பங்களிப்பை திரையுலகிற்கு வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி உலக சினிமாவையும் கலக்கியவர் நம் உலகநாயகன். பல சிரத்தையுடன் தனது ஒவ்வொரு படத்திலும் சமூக அக்கறையுடன் பல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்பவர்.

    சினிமா டூ அரசியல்

    சினிமா டூ அரசியல்

    பத்து வேடங்களில் நடித்த தனது தசாவதாரம் திரைப்படம் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். காதல் இளவரசனாக வலம் வந்து, இன்று உலக நாயகனாக அசத்திவருகிறார். இந்திய அரசியல் மட்டுமல்லாது உலக அரசியல் பற்றியும் தனது விரல் நுனியில் வைத்திருக்கும் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் எனும் அரசியல் கட்சியை துவங்கி அதை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.

    சாதனைகள் ஏராளம்

    சாதனைகள் ஏராளம்

    களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான கமல் நடிப்புலகில் பெற்ற விருதுகள், நிகழ்த்திய சாதனைகள், கவர்ந்த உள்ளங்கள் ஏராளம். அன்றும் இன்றும் என்றும் நம் உலகநாயகனுக்கு நமது அனைவரது பாராட்டும், வாழ்த்துக்களும், பிராத்தனைகளும் இருந்து கொண்டே இருக்கும்.

    English summary
    It's been 60 years since Kamal Hassan entered in the film industry. He has seen the world through his Dasavadaram movie starring ten roles. Come out as a romantic prince and become the hero of the world today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X