சரீரத்தை விட்டவர் சாரீரமாக அன்னய்யா நம்முடன் உலவுகிறார்....எஸ்.பி.பி பற்றி கமல் உருக்கம்

சென்னை : மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்பிபி உடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Recommended Video

பாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்பிபி,க்கு கொரோனாவிற்கு பிந்தைய உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி மருத்துவமனையிலேயே எஸ்பிபி.,யின் உயிர் பிரிந்தது .

எஸ்பிபி.,யின் பழைய ஃபோட்டோக்கள், வீடியோக்கள், பாடல்கள், பேட்டிகள் ஆகியவற்றை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பிற மொழி பிரபலங்களும் எஸ்பிபி.,யின் நினைவுகளை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இதனை ரசிகர்களும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

ஃபோட்டோ பகிர்ந்த கமல்

ஃபோட்டோ பகிர்ந்த கமல்

இந்நிலையில் நடிகர் கமலஹாசன், ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபி பற்றி உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார். எஸ்பிபி.,யுடன் எடுத்துக் கொண்ட பிளாக் அன்ட் ஒயிட் மற்றும் கலர் என இரண்டு பழைய ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ள கமல், தமிழில் தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்.

சாரீரமாக நம்மோடு உலவுகிறார்

சாரீரமாக நம்மோடு உலவுகிறார்

கமல் தனது பதிவில், " ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால் தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில் டிரெண்டிங்

தேசிய அளவில் டிரெண்டிங்

எஸ்பிபி.,யின் நினைவு தினத்தை முன்னிட்டு SPBalasubramanyam, SPB போன்ற ஹாஷ்டாகுகள் இந்திய அளவில் காலை முதலே டிரெண்டிங் ஆகி உள்ளன. கமலின் இந்த உருக்கமான பதிவையும் ஏராளமானோர் அதிகம் ரீட்வீட் செய்தும், லைக் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

உருகும் ரசிகர்கள்

உருகும் ரசிகர்கள்

"இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" .. உங்கள் பாடல் என்றுமே எங்கள் காதுகளில் ரீங்காரம் ஆக ஒலித்துக்கொண்டே இருக்கும்.. உங்கள் குரலாக அவரும் ...அவரின் வெளிப்பாடாக நீங்கள் இருப்பதும் நாங்கள் அடைந்த பாக்கியம்... நன்றி தலைவா. தமிழ் இருக்கும் வரை இந்த தமிழனின் குரல் தரணியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும்.இசை உள்ளவரை SPB இருப்பார் ...தமிழ் மக்கள் இசை இருக்கும் வரை உங்களுக்கு அழிவே கிடையாது.... எங்கள் அனைவரின் வாழ்விலும் எப்போதும் நீங்கள் சங்கீத பூங்காற்று.... நம்முடன் தான் இருப்பார் எப்போதும்!!! என பலரும் கமெண்ட் பகுதியில் எஸ்பிபி.,க்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X