ஜெயம் நடிகைகள் பயம் என் ராசி தெரியுமா, என் கூட நடிச்சவங்க எங்கேயோ போய் விடுவாங்க என்று அவ்வப்போது நடிகர்களும், நடிகைகளும் அள்ளி அடித்து விடுவது கோலிவுட்டில் சகஜமான விஷயம்.முன்பு தனுஷுடன் நடிக்கும் நடிகைகள் எல்லாம் டாப் லெவலுக்கு போய் விடுவார்கள் என்று ஊதி விட்டார்கள். ஷெரீன், சாயா சிங், சோனியா அகர்வால் என அவருடன் நடித்த நடிகைகள் எல்லாம் டாப்புக்குப் போய் விட்டார்கள் பாருங்கள் என்று சொல்லிய தனுஷ் தரப்பை நம்பி அவருடன் ஜோடி சேர புதுப் புதுக் குட்டிகள் அலையாய் அலைந்தன.ஆனால் அப்படிச் சொல்லப்பட்ட ஷெரீனுக்கு துள்ளுவதோ இளமைக்குப் பின் வந்த எந்தப் படமும் ஓடவில்லை. அதேபோல, சாயாசிங் திருடா திருடியோடு சரி, அதற்குப் பிறகு அவர் தேறவே இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின் இப்போது தான் ஒன்னு, இரண்டு படங்கள் வருகின்றன.சோனியா அகர்வால் கதியும் இதுதான். பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் தனுஷின் அண்ணன் செல்வராகவேனோடு சீக்கிரமே செட்டிலாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்போது தனுஷுக்கு நேரம் சரியில்லை.< யாரோடு சேர்ந்து நடித்தால் நாம் டாப்புக்குப் போக முடியும் என்று யோசிக்கும் நிலையில் தான் தனுஷ் இருக்கிறார்.தனுஷைப் போலவே ஜெயம் ரவியும், தனக்குத் தானே கோலிவுட்டில் அடிப்பொடிகளை வைத்துக் கொண்டு வதந்திகளைப் பரப்பி வந்தார். அண்ணனோட நடிச்சா போதும், அப்படியே டாப் கியர் தான் என்று பீலா விட்டு பீத்தித் திரிந்த அந்த கோஷ்டிகளை இப்போது கோலிவுட்டில் பார்க்க முடியவில்லை. காரணம், அண்ணனோட நேரமும் இப்போ சரியில்லாமல் இருப்பதுதான்.ஜெயம் ரவியுடன் நடித்த சதாவுக்கு அடுத்து அந்நியன் உள்பட சில படங்கள் கிடைத்தது உண்மை. ஆனால், இப்போது அஜீத்தின் திருப்பதி தவிர தமிழில் சுத்தமாக வாய்ப்பே இல்லை. அந்நியனுக்குப் பிறகு அடித்துத் தூள் கிளப்பப் போறேன் என்று கூறி வந்த சதா சம்பளத்தை உயர்த்தப் போய் இப்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்.சதாவை மாதிரியே ரவியோடு நடித்த மழை நாயகி ஷ்ரேயாவுக்கு ரஜினியுடன் சிவாஜியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்து வரும் ஷ்ரேயாவை இதுவரை வேறு யாரும் புக் செய்யவில்லை. புதிய படங்கள் எதுவும் இல்லை. சிவாஜி வெளிவந்து ஒருவேளை தேறினால் உண்டு.இதே கதிதான் காம்னா ஜெத்மலானிக்கும். இதயத்திருடன் எதையும் திருடாத டுபாக்கூர் திருடனாகி விட்டதால் ரவி, காம்னா தரப்பு படு அப்செட். இவர்களை வைத்து படம் எடுத்து விட்டோமே என்று இயக்குனரன் சரண் தரப்பும் அப்செட்டாகி உள்ளதாம். காம்னா இப்போது மீண்டும் தெலுங்கில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்.இப்படி தன்னுடன் நடித்த நடிகைகளுக்கும் தனுஷ் நடிகைகள் மாதிரியே ராசி பனால் பண்ணி வருவதால் அடக்கி வாசிங்கப்பா என்று அடிப்பொடிகளை ரவி தரப்பு தட்டி வைத்துள்ளதாம்.இப்போது த்ரிஷாதான் பெரிய கவலையில் உள்ளார். ரவியுடன் ஜோடி சேர்ந்து, அவரது அண்ணன் இயக்கத்தில் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. தனக்கும் ரவி ராசி பற்றிக் கொண்டு விட்டால் என்னாவது என்ற பீதியில் உள்ளாராம்.அப்படிப் போடு போடு போடு!

By Staff

என் ராசி தெரியுமா, என் கூட நடிச்சவங்க எங்கேயோ போய் விடுவாங்க என்று அவ்வப்போது நடிகர்களும், நடிகைகளும் அள்ளி அடித்து விடுவது கோலிவுட்டில் சகஜமான விஷயம்.

முன்பு தனுஷுடன் நடிக்கும் நடிகைகள் எல்லாம் டாப் லெவலுக்கு போய் விடுவார்கள் என்று ஊதி விட்டார்கள். ஷெரீன், சாயா சிங், சோனியா அகர்வால் என அவருடன் நடித்த நடிகைகள் எல்லாம் டாப்புக்குப் போய் விட்டார்கள் பாருங்கள் என்று சொல்லிய தனுஷ் தரப்பை நம்பி அவருடன் ஜோடி சேர புதுப் புதுக் குட்டிகள் அலையாய் அலைந்தன.

ஆனால் அப்படிச் சொல்லப்பட்ட ஷெரீனுக்கு துள்ளுவதோ இளமைக்குப் பின் வந்த எந்தப் படமும் ஓடவில்லை. அதேபோல, சாயாசிங் திருடா திருடியோடு சரி, அதற்குப் பிறகு அவர் தேறவே இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின் இப்போது தான் ஒன்னு, இரண்டு படங்கள் வருகின்றன.

சோனியா அகர்வால் கதியும் இதுதான். பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் தனுஷின் அண்ணன் செல்வராகவேனோடு சீக்கிரமே செட்டிலாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்போது தனுஷுக்கு நேரம் சரியில்லை.

தனுஷைப் போலவே ஜெயம் ரவியும், தனக்குத் தானே கோலிவுட்டில் அடிப்பொடிகளை வைத்துக் கொண்டு வதந்திகளைப் பரப்பி வந்தார். அண்ணனோட நடிச்சா போதும், அப்படியே டாப் கியர் தான் என்று பீலா விட்டு பீத்தித் திரிந்த அந்த கோஷ்டிகளை இப்போது கோலிவுட்டில் பார்க்க முடியவில்லை. காரணம், அண்ணனோட நேரமும் இப்போ சரியில்லாமல் இருப்பதுதான்.

ஜெயம் ரவியுடன் நடித்த சதாவுக்கு அடுத்து அந்நியன் உள்பட சில படங்கள் கிடைத்தது உண்மை. ஆனால், இப்போது அஜீத்தின் திருப்பதி தவிர தமிழில் சுத்தமாக வாய்ப்பே இல்லை. அந்நியனுக்குப் பிறகு அடித்துத் தூள் கிளப்பப் போறேன் என்று கூறி வந்த சதா சம்பளத்தை உயர்த்தப் போய் இப்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்.

சதாவை மாதிரியே ரவியோடு நடித்த மழை நாயகி ஷ்ரேயாவுக்கு ரஜினியுடன் சிவாஜியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்து வரும் ஷ்ரேயாவை இதுவரை வேறு யாரும் புக் செய்யவில்லை. புதிய படங்கள் எதுவும் இல்லை. சிவாஜி வெளிவந்து ஒருவேளை தேறினால் உண்டு.


இதே கதிதான் காம்னா ஜெத்மலானிக்கும். இதயத்திருடன் எதையும் திருடாத டுபாக்கூர் திருடனாகி விட்டதால் ரவி, காம்னா தரப்பு படு அப்செட். இவர்களை வைத்து படம் எடுத்து விட்டோமே என்று இயக்குனரன் சரண் தரப்பும் அப்செட்டாகி உள்ளதாம். காம்னா இப்போது மீண்டும் தெலுங்கில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி தன்னுடன் நடித்த நடிகைகளுக்கும் தனுஷ் நடிகைகள் மாதிரியே ராசி பனால் பண்ணி வருவதால் அடக்கி வாசிங்கப்பா என்று அடிப்பொடிகளை ரவி தரப்பு தட்டி வைத்துள்ளதாம்.

இப்போது த்ரிஷாதான் பெரிய கவலையில் உள்ளார். ரவியுடன் ஜோடி சேர்ந்து, அவரது அண்ணன் இயக்கத்தில் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. தனக்கும் ரவி ராசி பற்றிக் கொண்டு விட்டால் என்னாவது என்ற பீதியில் உள்ளாராம்.

அப்படிப் போடு போடு போடு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X