ஆசைப்பட்டா மட்டும் பத்தாது… அடம் பிடிக்கனும் எனச் சொல்லும் கனா…!
சிவகார்த்திகேயனின் கனா பட ட்ரெயிலர் வெளியாகியுள்ளது
Recommended Video

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள கனா திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ்கே புரடொக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள முதல் படம் கனா. இப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கிரிக்கெட் ஆசையைப் பற்றி பேசுகிறது. ஒரு பெண் குழந்தைக்கு கிரிக்கெட் வராது என எல்லோரும் பேச, அதை முறியடித்து எப்படி சாதிக்கிறாள் என்பதே படத்தின் கதை.
இப்படத்தில் கிரிக்கெட் கனவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் கிரிக்கெட் ஆசையை பூர்த்தி செய்யும், தந்தையாக சத்தியராஜ் நடித்துள்ளார்.
ஆசைப்பட்டா மட்டும் பத்தாது அடம் பிடிக்கத் தெரியனும் என்கிற அழுத்தமான வசனம் படத்தின் முக்கிய வசனமாகத் தெரிகிறது. சாதிக்கத்துடிக்கும் வெறி ஐஸ்வர்யா யாஜேஷின் கண்களில் தெரிகிறது.
சமீபகாலங்களில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிரத்தை எடுத்து நடிக்கும் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளார். இந்த ட்ரெயிலரைப் பார்க்கும்போது இயக்குனர் அருண்ராஜா காமாராஜ் அவரை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications