தனுஷின் மாரி 2 படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் கனா: என்ன நடக்கப் போகுதோ?
Recommended Video

சென்னை: தனுஷின் மாரி 2 படம் ரிலீஸாகும் அன்றே சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா ரிலீஸாக உள்ளது.
தனுஷ் தயாரித்து நடித்துள்ள மாரி 2 படம் டிசம்பர் 21ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்தார்கள். ரிலீஸ் தேதியை தனுஷ் இன்று உறுதி செய்தார். மாரி 2 படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ள கனா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்
கனா படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் அது வரும் 21ம் தேதி வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
தனுஷ்
மாரி 2 ரிலீஸ் மற்றும் ட்ரெய்லர் குறித்து தனுஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் கனா பட ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா
சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை. இந்நிலையில் தனுஷ் படம் ரிலீஸாகும் அதே நாளில் தனது படத்தை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிவா, யோசிக்காமல் செய்திருக்க மாட்டார். நடப்பது நடக்கட்டும்.
ஏன் சிவா?
ஏன் சிவகார்த்திகேயன் இப்படி ஒரு முடிவு?


Click it and Unblock the Notifications











