Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியில் அறிமுகமாகிறார் லாரன்ஸின் 'காஞ்சனா 3' நடிகை... ஹீரோ, அந்த பிரபல பாலிவுட் நடிகர் மகனாமே!
சென்னை: லாரன்ஸில் காஞ்சனா 3 படத்தில் நடித்த ஹீரோயின் இந்தியில் அறிமுகமாகிறார்.
லாரன்ஸ் இயக்கத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி நடித்த படம், காஞ்சனா 3.
இதில் இன்னொரு ஹீரோயினாக, கிளாமராக நடித்திருந்தவர் நிக்கி தம்போலி. இதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்தார்.
தென்னிந்திய சினிமா
இப்போது அவர் இந்தியில் அறிமுகமாகிறார். மும்பையில் இருந்துதான் ஒரு காலத்தில், தென்னிந்திய சினிமாவுக்கு ஹீரோயினை இறக்குமதி செய்வார்கள். இப்போது அப்படி இல்லை. தென்னிந்திய சினிமாவில் கலக்கிய காஜல் அகர்வால், இலியானா, தமன்னா ஆகியோர் அதற்கு பிறகு இந்திக்கு சென்றார்கள். அங்கு அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வருகின்றன.
மிதுன் சக்கரவர்த்தி
அந்த வரிசையில், மும்பையில் இருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான, நடிகை நிக்கி தம்போலியும் இப்போது இந்திக்குச் செல்கிறார். ராஜேஷ் பஜாஜ் இயக்கும் இந்தி படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர், நமஷி சக்கரவர்த்தி. இவர், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் ஆவார்
டெஸ்ட் ஷூட்
இதுபற்றி நிக்கி தம்போலி கூறும்போது, 'எனது புகைப்படங்களையும் நான் நடித்துள்ள படங்களைப் பார்த்த இயக்குனர் ராஜேஷ் பஜாஜ், என்னை இந்தப் படத்தின் ஆடிஷனுக்கு அழைத்தார். சில வசனங்களைக் கொடுத்து நடிக்கச் சொன்னார். அதில் என் நடிப்பு பிடித்திருந்தது. பிறகு டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள். அதிலும் என் லுக் ஓகே ஆனதால், தேர்வு செய்துள்ளனர்.
வொர்க் ஷாப்
இது ஜாலியான பொழுதுபோக்கு படம்தான். பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த பெண் கேரக்டர் எனக்கு. என்ஆர்ஐ ஆக நடிக்கிறேன். காதல், காமெடி, ஆக்ஷன் எல்லாமே படத்தில் இருக்கிறது. எனது பாடிலாங்குவேஜ், பேச்சுவழக்கு உள்ளிட்ட ஸ்டைல்களுக்காக வொர்க் ஷாப் நடக்க இருக்கிறது. அதில் விரைவில் கலந்துகொள்ள இருக்கிறேன். நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள படம் என்று தெரிவித்துள்ளார்.