கேஜிஎஃப் 2விடம் வாங்கிய அடி விஜய்க்கு நினைவு வந்ததா?.. காந்தாரா 2வால்தான் ஜனநாயகன் பொங்கலுக்கு வருதா?
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் 2026ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. ஆனால் இந்தப் படத்தை முதலில் தீபாவளிக்குத்தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால் திடீரென பொங்கலுக்கு தள்ளிப்போனது. இந்நிலையில் எதற்காக ரிலீஸ் தேதியில் மாற்றம் வந்தது குறித்த புதிய தகவல்கள் கோலிவுட்டில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அது விஜய் ரசிகர்களுக்கு சங்கடத்தை கொடுத்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தோடு சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதாக பலரால் கூறப்படுகிறது. அவருமே கூட கட்சி ஆரம்பித்தபோது அதைத்தான் தெரிவித்திருந்தார். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை; தேர்தல் முடிவுகளை பொறுத்துதான் திரைத்துறையிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுகிறாரா இல்லையா என்பது தெரியும் என அவரது ரசிகர்கள் அடித்து கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
பொங்கலுக்கு ரிலீஸ்: படமானது 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதுவரை படத்தின் ஓடிடி, சேட்டிலைட், ஆடியோ உள்ளிட்ட வியாபாரங்கள் எல்லாம் பெரிய தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதான் கடைசி படம் என கூறப்படுவதால் நிச்சயம் வசூலிலும் பெரிய சாதனையை படைக்கும் என அவரது ரசிகர்கள் உச்சக்கட்டமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு பிளான்: இதற்கிடையே இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத்தான் முதலில் படக்குழு பிளான் செய்திருந்தது. ஆனால் ஜனவரிக்கு தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவிருப்பதால்; வருடத்தின் தொடக்கத்தில் ரிலீஸ் செய்தால்; அது தனது அரசியல் பயணத்துக்கு மைலேஜ் கொடுக்கும் என விஜய் நினைத்ததால்தான் ஜனவரிக்கு ரிலீஸை வைத்துக்கொள்ளலாம் என தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னதாக பேச்சுக்கள் எழுந்தன.
புதிய தகவல்: ஆனால் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. வலைப்பேச்சு டீம் இதுகுறித்து ஒரு வீடியோவில், "விஜய்யின் ஜனநாயகன் படம் தீபாவளியையொட்டி அக்டோபர் மாதத்தில்தான் ரிலீஸ் செய்ய பிளான் செய்திருந்தார்கள். ஆனால் காந்தாரா படத்தின் இரண்டாவது பாகமும் அக்டோபரில் வந்ததால்தான் இவர்கள் ஜனவரி மாதத்துக்கு தள்ளி சென்றார்கள்' என கூறினார்கள். அவர்கள் கூறிய இந்த விஷயம் சோஷியல் மீடியாவில் பல்வேறு பேச்சுக்களை கிளப்பியிருக்கின்றன.
என்ன பேச்சுக்கள்?: அதாவது, ஏற்கனவே கன்னட படமான கேஜிஎஃப் 2வுடன் ரிலீஸாகி விஜய்யின் பீஸ்ட் ரோஸ்ட் ஆனதை இன்னமும் அவர் மறந்திருக்கமாட்டார். அந்தப் படத்தை தயாரித்ததும் ஹோம்பலே பிலிம்ஸ்தான். காந்தாரா 2வை தயாரித்ததும் அதே நிறுவனம்தான். அந்த அடியெல்லாம் விஜய்யின் நினைவுக்கு வந்து போயிருக்கும். அதனால்தான் எதற்காக ரிஸ்க்; தனியாக வருவோம் என்ற பொங்கலுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அங்கும் ட்விஸ்ட்டாக சிவகார்த்திகேயனின் பராசக்தி வருகிறது. விஜய்யின் கடைசி படத்துக்கு இவ்வளவு குடைச்சல் வருகிறதே என்று கமெண்ட்ஸ்கள் பறக்க ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











